கல்லூரி நட்பு
வாழ்க்கையின் முதல் அத்தியாயத்தை தொடங்க
கல்லூரிக்குள் நுழைந்தோம் ....
வழி தெரியாது விழித்த இருவரும் சந்தித்து கொண்டோம் ...
சுவாசங்களை பரிமாறி கொண்டோம்...
ஒன்றாய் நடந்தோம் ...ஓருயிராய் இணைந்தோம் ...
பட்டாம்பூச்சி போல் சிறகடித்து பறந்தோம் கல்லூரிக்குள் ..
பூக்களை தேடி அலைந்தோம் ...ஒரே பூவில் காதல் தேன்னை ருசித்தோம் இருவரும் அறியாது..
சில மாதங்கள் நீண்டன ...இருவர்க்கும் உண்மை தெரியவர ...கடல் போல் பொங்கியது கோபம்...
சிலை போல் ஆனது இருவர் உள்ளம் ...பிரிந்தது உயிர்,இறந்தது நட்பு...
கல்லூரியின் இறுதி காலம் நெருங்கியது..
காலம் எறும்பாய் நம் மனதில் ஊற ...
கல்லாய் இருந்த மனசு தேய்ந்தது..
அன்பு ஊற்றாய் பொங்கியது...
கண்ணீர் துளிகளை சிந்திய வண்ணம் இருவரின் தோழ்களை தடவிக்கொண்டோம் ...சிறகடித்து பறந்தோம் மீண்டும் வானில் பிரியாது ....