காதல் மன்னன்

ஆயிரம் ஆயிரம் மேகங்கள்
என்னை காதலிக்க.!
ஏக்கத்தால்,
தேய்ந்தவள்...
சித்திரை வெயிலில்
மையெடுத்து..!
தங்க தங்கமாய் மின்ன
நட்சத்திரங்கள் பதித்து,
வானத்தில் கடிதம் எழுதி,
காதல் சொல்ல.
வளர்ந்தவள்...
அவள்..
வெட்கம் கொண்ட
வெள்ளிநிலா!
அவள்..
மேகத்தை விலக்கி
தூதாய் பொழிந்த கனவுகளில்
நான்
மன்னனாகிறேன்!
காதல் மன்னனாகிறேன்...!