விழித்திரு மனிதா

விழித்திரு மனிதா விழித்திரு...
விழியை தாண்டி விழித்தெழு!
மனிதா மனிதா...
நீ செய்வது சரியா?
மலையை உடைத்து
காட்டை அழித்து
நிலத்தை பறித்து
நீரை உறிஞ்சி
பாலையாக்கும் மனிதா...
நீ செய்வது சரியா?
விழித்திரு மனிதா விழித்திரு...
விழியை தாண்டி விழித்தெழு!
சுத்தமான காற்றில்லை
சுகாதாரமான இடமில்லை
குடிக்க நீரும் இங்கில்லை
நல்ல உணவும் இங்கில்லை
இங்கில்லை...
இப்படியே போனால்
என்னாகும்!
விழித்திரு மனிதா விழித்திரு...
விழியை தாண்டி விழித்தெழு!
~ பிரபாவதி வீரமுத்து