என்னவனே என் மாமனே -சகிமுதல்பூ

என்னவனுக்கு ஒரு மடல்

மாமனே
நாம்சந்தித்து பலநாட்கள்
வாரங்களாகி சில வாரங்கள்
மாதங்காகி சில மாதங்கள்
இன்று வருடமாகிவிட்டது ......

இன்னும் சில
நாட்கள் ம்ம்ம்ம் ......

மூன்றே வாரங்கள்
தானடா உள்ளது ....

காதல் பறவைகளாக
பறக்கும் நாம்
திருமண பந்தத்தில்
ஜோடிக்கிளிகளாக இணைய......

அயல்நாட்டிலிருந்து நீ தாயகம்
திரும்பும் நாளை எண்ணி காத்துக்கொண்டிருக்கிறேன் ....

மணமாலை மாற்றி
நம் மணநாளை காண
மாமனே உனக்காகவே
உன்வரைவை எண்ணி உன்னவள் .......

உன்கைப்பிடித்து உன்
மனைவியாக மட்டும்மல்ல
உன் தாயாகவும் உடன் வருவேணடா நம் ஆயுள்வரை....

நீ என்றுமே -என் முதல்மழலைச்செல்வமாட.......

கொஞ்சல்கள் இருக்கும் ....
கெஞ்சல்கள் இருக்கும் ..
கோபங்கள் இருக்கும் ...
அன்பும் இருக்கும் ....
பாசமும் இருக்கும் ....
நேசமும் இருக்கும் ...
நட்பும் இருக்கும் ....
அன்புக்கட்டளைகளும் நிச்சயம்
உண்டு மாமனே ...

உன் அன்பு மட்டும்
உண்மையாக என்
ஆயுள்வரை வேண்டுமடா
என்னாலனே.....

எதையும் சமாளிக்கும்
திறமையும் எமக்குண்டு....
எதையும் ஏற்கும்
மனமும் எனக்குண்டு ...

உன் அன்புமட்டும்
ஆயுள் வரை உண்மையாக
தாய்ப்பால்போல் தூய்மையாக
வேண்டுமடா ......

என் தாய்தந்தைக்கு
பிறகு என் வாழ்க்கை உன்னுடன் பயணமாகிறது .....

நிச்சயம் நம்புகிறேன் ....

ஏமாற்றங்கள் இருக்காது என்று
முழுமையாக நம்புகிறேன் .....

ஏமாற்றங்கள் இருக்குமெனில்
அவை என் எண்ணங்களுக்கு
மட்டுமே தவிர எனக்கில்லை ....

மாமனே

மொத்தமாய் விலகிவிடுவேன்
உன்னிலிருந்து முழுமையாக....

என்னைக்காயப்படுத்தும்
வார்த்தைகளை மறந்துவிடு
இன்றோடு ...

ஏனெனில் நீயே
புரிந்துக்கொள்வாய் என
நம்புகிறேன் ....

இன்று உன்காதலி
இனி என்றென்றும்
உன் துணைவி ......

மறவாதே ......

உன்னை நெஞ்சில்
சுமக்கிறேன் ...
மாமனே .....
ஆயுள்வரை .....

அந்த சுகம்
என் ஆயுசுக்கும் இன்பமே ....

தொடரவேண்டும்
நம் உறவு இனிவரும்
ஏழேழு ஜென்மங்களும் ......

மாமனே ....

உன்னையெண்ணி
உன்வரைவையெண்ணி
உன் மனைவி ......

i லவ் you மாமா
i மிஸ் you da

எழுதியவர் : சகிமுதல்பூ (3-Aug-17, 2:12 pm)
சேர்த்தது : சங்கீதா
பார்வை : 385

மேலே