விதியே மாற்று இறைவா
![](https://eluthu.com/images/loading.gif)
என் இறைவா என் இறைவா
எங்கள் தண்ணீர் பிரச்சினையே தீர்த்துவிடு....
வீடு தேடி தண்ணீர் வேண்டாம்
வீதி வரைக்குமாவது தண்ணீர் வரட்டும்
கடலளவு தண்ணீர் வேண்டாம்
கம்மாயிலாவது தண்ணீர் இருக்கட்டும்
குளிக்க ஒரு ஊர்
குடிக்க ஒரு ஊர்
என் உறவுகள் அலைவதே பார்த்தால்
என் உடலும் கொதிக்கிறது
என் உணர்வும் வெடிக்கிறது
கண்ணீர்தான் எங்கள் குடிநீரா? காண்பதெல்லாம் காணல்நீரா?
விதிகளை மாற்றிவிடு என் இறைவா
விமோசனம் கிடைக்கட்டும் எங்களுக்கும்.
விதிகளை மாற்றிவிடு என் இறைவா
விமோசனம் கிடைக்கட்டும் எங்களுக்கும்.