காத்திருக்கும் பெரியவர்

பெய்யும் பருவ மழையா

பைய வரும் காவிரியா

எது வரும் முன்னால

எனக் காத்திருக்கும்

தமிழகத்தின்

விளை நிலம்போல



கட்டிய மனைவி

முந்திக்கொண்டதால்

போறயிடம் புரியாமல்

மூத்தவனா, இளையவனா

யாரழைத்து போவதென

காத்திருக்கும் பெரியவர்.

எழுதியவர் : கோ. கணபதி. (3-Aug-17, 4:51 pm)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 72

மேலே