கண் காதல்
அன்னாந்து பார்க்கும் நிலவில் கறைகள் கண்டு சிரிக்கிறேன்
கரை படியாமல் சிரிக்கும் என் கள்வனின் கண்ணோடு தோற்றுவிட்டது என்று
அப்படி இப்படி என்று இல்லாமல் என் அவ்வளவு பார்வையையும்
அவன் பக்கம் திருப்பிவிடுகிறான்
இமைக்கும் போதும் கலையக்கூடாது என்று
இவனை கொஞ்சம் திருடிக்கொள்கிறேன்
கொஞ்சம் என திருடியது போதாமல்
மொத்தமாய் திருடிவிட எத்தனிக்கிறேன் ..........
கத்தி இல்லாமல் கண்ணில் கொலை
இவன் தான் என்று சத்தம் இல்லாத எந்தன் நிலை