என்னைக் கொல்லாதே
......என்னைக் கொல்லாதே.....
என் உள்ளத்துக்கும் உனக்குமான இடைவெளியில்
சிக்கித் தவிக்கும் என் காதல்
விலகிடவும் முடியாமல்
நெருங்கிடவும் முடியாமல்
இனிய இம்சைகளை எனக்குள்
இலவசமாய் விதைத்துச் செல்கிறது...
கனவாக நினைத்தே அனைத்தையும்
மறந்திடத் துடிக்கிறேன்...
என் இரவுகளைக் கொல்லும்
நீயோ நனவாக வந்து எனையும்
கொல்லாமல் கொன்று செல்கிறாய்...
உன் பார்வைகள் சொல்லிய
மொழிகளில் என்னை
நீயாகவே மாற்றிக் கொண்டேன்..
இன்று உன் மௌனத்தின்
மொழிகளை அறிந்திடவே
காதல் அகராதியை நானும்
தேடி அலைகின்றேன்...
முற்றுப்புள்ளி வைக்கத் தவிக்கும்
என் காதலுக்கு முடிந்தால்
முடிவொன்றைச் சொல்லிவிடு...
இல்லை என் காதலை
என்னுடனேயே நீ வாழ விடு..
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
