ஒரு தலைகாதலின் பகல் கனவு

#செங்கதிர் உதித்த ஞாயிறு காலை

#உன் வீட்டு வாசலில்

#என் இருசக்கர வாகனம்

#ஜன்னல் வழியே விழுந்ததடி உன் பார்வை

#என் உருவம் காணாத உன் கருவிழிகள்

#ஒலியின் ரீங்காரம்

#என் அலைபேசி உன் குறுஞ்செய்தி

#என் இதழோரம் நமுட்டு சிரிப்புடன்

#சற்று நிமிடத்தில் காணவில்லை என் வாகனத்தையும்,என்னையும்

#பத்து நிமிட இடைவேளை

#கேளரத்துசேலை உடுத்தி கிறங்கடித்தாய்

#உன் கார்மேகக்கூந்தலில் சிரிப்புடன் அடைக்கலம் கொண்டது மல்லிகைப்பூ

#இருபுருவ எல்லைகோடு அருகே உன் இட்ட சந்தனக்கோடு

#மலர்பாதத்தையிட்ட அழகிய வெள்ளிகொலுசு

#மிரண்டே போனதடி என் இதயம்

#பின்இருக்கையில் உன் செம்மேனி தேகம்

#இருசக்கரம் உருண்டோடும்போதே
எழுதிய கற்பனையும்,கவிதையும் கம்பருக்கே சவால் விட்டது.

#கிழக்கு கடற்கரை சாலை

#அதிவேகமாய் பறந்த என் வாகனம்

#வாகனவேகத்தை கட்டுபடுத்தியது உன் கைகள் என் தோள் மூலதாரமாக

#எரிபொருள் இருந்தும்

#திக்குக்தெனறிய வாகனம்

#உப்புகலந்த ஓத காற்று

#மாலைவேளை தேநீர் விடுதி

#சிலர்ப்பூட்டும் உன் மலையாள கலந்த தமிழ் பேச்சு

#சிரித்து சிரித்து சிரிப்புக்கு வந்தது ஆனந்த கண்ணீர்

#உன் கருவிழி அதட்டும் மொறைப்பு பார்வை

#சமாதான உடன்படிக்கை

#தெருவில் வீதியி்ன் வெளிச்சம்

#செய்கையில் சொல்லி சென்றாய்

#உன் வீட்டில் மின் விளக்கு எறிய

#குறுஞ்செய்தியில் உன்னிடம் இருந்து வினாவாக்கியம்

#இனிதாய் முடிந்தது வார இறுதிநாள்

#கண்திறந்து பார்த்தால் கனவு
அழகாய் இருந்தாலும் மெதுவாய் கரைந்து உன் போனாதடி உன் நினைவால்....!!!!

எழுதியவர் : கவிக்கு புதியவன் (6-Aug-17, 11:20 pm)
பார்வை : 177

மேலே