விசைகளில் பிறக்கும் இசை

என்மீது
பூவாய் வருடவேண்டும்
அல்லது
வாளாய் கீறவேண்டும்
இல்லையெனில்
நான் அசைவதில்லை

என் முன்பு
பஞ்சாய் பறக்கவேண்டும்
அல்லது
முள்ளாய்க் கிடக்கவேண்டும்
இல்லையெனில்
நான் எடுப்பதில்லை

பாதித்தலொன்றே
மனதைத் திறக்கும் சாவி

பாறைகளாய் வந்தும்
மோதலாம்
அப்போது நான்
திறக்கலாம் அல்லது இறக்கலாம்
கவலையில்லை
உனக்குப் பாதை கிடைத்துவிடும்
அது
போதும்தானே !

@இளவெண்மணியன்

எழுதியவர் : இளவெண்மணியன் (6-Aug-17, 11:14 pm)
சேர்த்தது : இளவெண்மணியன்
பார்வை : 85

மேலே