உன் மௌனம் எனக்குப் பிடித்திருக்கிறது

உன் மௌனம்
எனக்குப் பிடித்திருக்கிறது

உன்னை
உனக்குள் தேடி
கண்டடைந்துவிட்டேன் என்று
நீ
உணர்ந்துகொண்ட காரணத்தால்
உன் மௌனம்
எனக்குப் பிடித்திருக்கிறது

உன் நெருக்கம்
எனக்குப் பிடித்திருக்கிறது

விலகி
தூரம் சென்று
வெறுத்துவிட முடியாமல்
இதயத்தால் ஒன்றாகி
கலந்து நிற்கும் காரணத்தால்
உன் நெருக்கம்
எனக்குப் பிடித்திருக்கிறது !

@இளவெண்மணியன்

எழுதியவர் : இளவெண்மணியன் (6-Aug-17, 10:30 pm)
சேர்த்தது : இளவெண்மணியன்
பார்வை : 310

மேலே