♡♡♡ராசவே உன்ன நம்பி♡♡♡ - திகில் தொடர்- பகுதி - 04
♡♡♡ராசவே உன்ன நம்பி♡♡♡
- திகில் தொடர்- பகுதி - 04
கொஞ்ச நேரத்தில் அங்கே இருந்த ஊர்வாசிகள் அவர்கள் இருவரையும் வைத்தியசாலையில் அனுமதித்து ராஜின் போனில் உள்ள ராஜின் அப்பாக்கு கோல் பண்ணி தகவல் வழங்கினர்.
அடுத்த மணித்தியாலத்தில் ராஜின் அம்மா அப்பா வந்தனர். இருவரும் அழுதுக்கொண்டே விசாரித்தார்கள்.
டாக்டர்: "இப்ப ஒன்னு சொல்ல முடியாது கொஞ்ச நேரம் இருங்க" என்று சொல்லி ICU சென்றார். இருவரும் மனம் உடைந்து போய் அழுது கொண்டிருந்தனர்.
சில மணித்தியாலங்களில் டாக்டர் வெளியே வந்தார்.
ராஜ் அப்பா : "டாக்டர் பிள்ளைகளுக்கு என்னாச்சி?"
மௌனமாக இருந்தார். மீண்டும் " டாக்டர் சொல்லுங்க என்னாச்சி" என்றார்.
டாக்டர் : "என்னால சொல்ல முடியல ஆனால் சொல்லிதான் ஆகனும் இது என்னட கடமை உங்க மருமகளுக்கு கால் உடைஞ்சிட்டுது அவங்க நடக்க ஆரம்பிக்க 6 மாதங்களுக்கு மேலாகும். ஆனால் உங்க பையன்!!!"
ராஜ் அம்மா அப்பா : (அதிர்ச்சியில்) " டாக்டர் எங்க பையன்!!"
டாக்டர் : "உங்க பையன் கோமால இருக்காரு எப்ப சுய நினைவு வரும்னு தெரியாது கடவுள வேண்டிக்குங்க"
இருவரும் அதிர்ச்சி மற்றும் கவலையில் மேலும் அழ ஆரம்பித்தனர். அழுது கொண்டே இருவரையும் பார்க்க சென்றனர். திவ்யா மயக்கத்தில் இருந்தாள். ராஜ் சுய நினைவு அற்று மயக்கத்தில் கிடந்தான்.
ராஜ் அம்மா அப்பா : (அழுதவாறு) "ராஜ்... ராஜ் பாருப்பா.... " எவ்வளவு கதைத்தும் அவனிடமிருந்து ஓர் அசைவுக்கூட இல்லை.
டாக்டர் உள்ளே வந்து
டாக்டர் : "இப்ப ரொம்ப லேட் ஆகிட்டு நீங்க போய் நாளைக்கு வாங்க இருட்டாக போகுது இதுக்கு பிறகு இங்க யாரும் இருக்க allowed
பொய்ட்டு வாங்க. கடவுள வேண்டிக்குங்க நல்லதே நடக்கும். இருவரும் கண்ணீரோடு சென்றனர்.
வீட்டிற்குப் போய் இருவரும் தூங்க ஆயத்தமானார்கள். ராஜின் அம்மா கடவுளை பிராத்தித்து விட்டு ராஜின் அறைக்குச் சென்றாள். சென்று பார்த்த போது அதிர்ச்சியும் பயமும் ஏற்பட்டது அங்கே ராஜின் புதிய ஆடைகள் எல்லாம் வீசப்பட்டு அவனுடைய பழைய ஆடைகள் அவனுடைய கட்டிலில் குவிந்து கிடக்க அந்த ஆடைகளின் மேல் அந்த கருப்பு உருவம் சாய்ந்துக் கொண்டிருந்து. அதிர்ச்சியில் "என்னங்க"
என்று கத்தினாள். உடனே அந்த கருப்பு உருவம் ஜன்னல் வழியாக சென்று மரத்தின் இடையில் மறைந்தது.
ராஜ் அப்பா : "என்னாச்சு ஏ கத்துன"
ராஜின் அம்மா நடந்ததை சொன்னாள்.
ராஜின் அப்பா : "ஏதாவது பிரம்மயாக இருக்கும்"
என்று சமாளித்து அறைக்குச் அழைத்து சென்று தூங்க அழைத்துச் சென்றார்.
ராஜின் அம்மா : "பயமா இருக்குங்க."
ராஜின் அப்பா : "ஒன்னுமில்ல படு"
ராஜின் அம்மா தூங்கினாள் அழுகையோடு.
ராஜின் அப்பா மனதுக்குள் "இதததான் அண்டக்கி மருமகளும் சொன்னா இண்டக்கி இவ இப்படி சொல்றா இங்க என்ன நடக்குது" என்ற யோசனையும் பிள்ளைகளையும் நினைத்தப்படி கண்ணீரோடு அவரை அறியாமல் தூக்கம் போய் விட்டது.
நேரம் நடுநிசி 1.30 இருக்கும் போன் மணி அடித்தது. ராஜின் அப்பா திடிரென எழுந்து போனை எடுத்தார்.
ராஜின் அப்பா : "ஹலோ"
மறுபக்கம் டாக்டரின் குரல்
டாக்டர் : "ஹலோ"
ராஜின் அப்பா : "டாக்டர் என்ன இ்ந்த நேரத்துல"
டாக்டர் மௌனமாக இருந்தார்.
மீண்டும் ராஜின் அப்பா "டாக்டர்... டாக்டர்..."
டாக்டர் : (பதற்றமும் பயமும் கலந்த தொணியில்) "நீங்க கொஞ்சம் அவசரமா வாங்க ஹொஸ்பிட்டலுக்கு"
ராஜின் அப்பா : "டாக்டர் என்ன சொல்றிங்க இந்த நேரத்துல ஏன் என்னாச்சி சொல்லுங்க"
டாக்டர் : (மேலும் பதற்றத்தில்) "பிலீஸ் கொஞ்சம் வேகமா வாங்க" என்று போனை வத்தார்.
ராஜின் அப்பாக்கோ ஒன்றும் புரியவில்லை பல எண்ணங்கள் தோன்றி மறைய ஆரம்பித்தன. மனைவி நல்ல தூக்கம் மனைவியிடம் சொல்லாமல் மெதுவாக சென்று வாகனத்தை எடுத்துக் கொண்டு வீட்டு வாசலை தாண்டினார். அந்த நடுநிசியில்....
தொடரும்......