யாரோ இவள்
மையற்ற விழிகளில் கனவு மையல் கொண்டது
மெய்யற்ற உதட்டில் கவிதை பூண்டது;
கரிசல் காட்டு கூந்தல் கண்டு ;
அமேசான் காடும் ஆசை கண்டது
சூரியன் ஒளிரும் கண்கள் கண்டு,
விளக்கின் திரியும் ஏக்கம் கொண்டது
வெள்ளிக்கிண்ண உள்ளங்கை கண்டு
தேய்பிறை கொஞ்சம் மௌனம் ஆனது
தாமரை காதுகளில் மழைத்துளி தோடுகள் போட;
பூவின் இதழும் கோபம் கொண்டது....
முகத்தின் அழகால் உலகம் நின்றது
அகத்தின் அழகு அதேயே வென்றது..!!!
அருவிபோல் வழியும் திறமைகள் பலநூறு ;
பருத்தி ஆடை கீற்றில் அடக்கம் அறுநூறு .
தேவதை என்றால்.... தரையில் நிற்கிறாள் !
கனவில் என்றால்... கண்முன் நடக்கிறாள் ...
தினமும் காணும் யார் இந்த குழலோ ...
இவள் படைத்தவனின் நிழலோ....!!!