தருவேன் முத்தம்

பட்டுவண்ண சித்திரமே பையப் பேசு!
***பஞ்சுவிரல் வலிக்காமல் கையை வீசு!
சிட்டுபோலச் சிரித்தென்றன் நெஞ்சை யள்ளு!
***சிங்கார கண்ணாவுன் சொல்லோ கள்ளு!
கட்டியுனைக் கொஞ்சிடவே உள்ளம் ஏங்கும்!
***கண்களிலே வைத்துன்னை மணியாய்த் தாங்கும்!
மட்டில்லா மகிழ்ச்சியினால் திளைப்பேன் நித்தம்!
***மழலைமொழி கேட்டதுமே தருவேன் முத்தம்!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (9-Aug-17, 12:34 am)
பார்வை : 61

மேலே