கண்ணீர் துளிகள்
விவசாய நாடு!
பணக்கார நாடாமே!
அக்காலம்
மழையேறிவிட்டது!!
மழைத்துளி
மண்ணில் விழும்
காலம் மழையேறி
விவசாயிகளின் கண்ணீர்த்துளி
மண்ணில் விழும்
காலம் பிறந்துவிட்டது!
தன்னை உயர்த்தாமல்
சமுதாயத்தை உயர்த்தினானே
அவன் கண்ணீர் விடுவதைக்
கண்டுக்கொல்லாமல் போகும்
நம் சமுதாயத்திற்கு தெரியவில்லை!!
அவன் கண்ணீரில்
நம் சமூகம் கரைகிறதே!!
ஏதோ ஒருநாளில்
உலகில் செல்வந்தனாம்
ஆனால்
இன்று அவன்
மனமுறிந்து நிற்கின்றான்!!!