வாடி என்னை தேடி

என் வீட்டிற்கு நீ வரமாய் வர வேண்டும்
என் தந்தைக்கு மகளாய் வாழ வேண்டும்

தினமும் முத்தத்துடன்...
நீ தரும் காபியுடன் காலை தொடங்க வேண்டும்

என் அன்னை போல் உன்னை காக்க
நீ மழலையாய் மாற வேண்டும்

மனதில் உள்ள பாரமெல்லாம் ​உனை ​நினைக்கும் போது கரைய
உள்ளம் பறவையாய் என்றும் உன்னை சுற்றும்

பெண்ணே....நீ தரும் அன்பு போதும்
நான் சிறக்க
நம் குழந்தை சாதனை படைக்க

சோதனையில் சிரிப்போம்
கஷ்டத்தில் தோள் கொடுப்போம்
நம் சந்ததைக்கு புதுப் பாடம் படைப்போம்
வாடி என்னை தேடி

எழுதியவர் : கண்மணி (11-Aug-17, 2:48 pm)
Tanglish : kaadhal kaditham
பார்வை : 149

மேலே