கல்லறையில் ஓர் காதல் பயணம்_பாகம் 4

கல்லறையில் ஓர்  காதல் பயணம்_பாகம் 4

கதவின் கைப்பிடி தப்பித்தது கனல் சூழும் சினத்திடமிருந்து. கதவை திறந்தவனின் ஒரு நொடி பிரம்மிப்பு சற்றே களைந்து போக எதிர் நின்றவன் இருகக் கட்டிக் கொண்டான். எப்டி இருக்கடா??? பாத்து எவ்வளவு நாள் ஆச்சு. ஒரு போன் கூட பண்ணல. எங்க எல்லாரையும் மறந்துட்டியா??? என அடுக்கிக் கொண்டே போக வாயடைக்க நின்றவன் கைகள் தோளினை பற்றின. ஒருவழியாக பிடி தார்த்தப்பட வருண் வாய் திறந்தான் எப்டி இருக்க அரவிந்த் ??? என்ன பன்ற??? கேள்விகள் தொடர்ந்து கொண்டிருக்க எதிர் நிற்பவனை உள்ளே அழைக்க நினைவு எட்டியது. இருவரும் உள் நுழைய அறை பூட்டப் படாதிருந்தது. உள் நுழைந்தவனிடம் மீண்டும் கேள்விகள் ஓங்கின. இருவரும் ஒருவழியாக பேச்சை நிறுத்த ஓரிரு நொடிகள் அமைதி நிலவியது. கடந்த கால கதைகள், வகுப்பறை வசை பாடல்கள், ஊர் சுற்றிய உணர்வுகள், கல்லூரிச் சுற்றுலா, காலம் மறவா காதல் கதைகள் பார்க்கப் பட்ட சினிமாக்கள் என அனைத்தும் பேசி முடிக்கப் பட்டன. சின்னச் சின்னச் சண்டைகள், சிரித்துக் கழித்த தருணங்கள், விழியோரக் கனவுகள், வியர்க்க வைத்த விளையாட்டு மைதானம், அலை பாய்ந்த ஆசைகள், அடக்கப்பட்ட உணர்வுகள் என எதையும் விட்டுவைக்கவில்லை. சரி எனக்கு பசிக்குது நா போய் ப்ரெஷ் ஆயிட்டு வரே, ரெண்டு பேரும் வெளில போய்ட்டு வரலாம்_இது அரவிந்திடமிருந்து. வருண் நிதானமாய் தலை அசைக்க இருவரும் அங்கிருந்து நகர்ந்தனர். குழப்பமும் தனிமையும் சூழ்ந்தவனுக்கு அரவிந்தின் வருகை ஒரு ஆறுதல் தான் போல. காலை கிட்டத் தட்ட 8 மணி இருக்கும் இருவரும் அறை விட்டு நகர வருணால் அறை பூட்டப் பட்டது. இன்னும் இரண்டு நாள் மட்டுமே மீதமிருக்க கணிசமாகக் கூட்டம் கூடியது. கல்லூரி திறக்கப்பட்ட நாள் இன்று வரையிலான முதல் "அலுமினி மீட்டிங்" அது தான். இருவரும் ஒருசேர நடை போட கடந்த கால நபர்கள் அனைவரும் கண்களில் தென்பட ஒரு குறுஞ் சிரிப்புடன் கல்லூரி வாயில் கடக்கப் பட்டது. பேருந்து நிறுத்தம் எதிர் பட இருவரும் காத்திருக்க அரவிந்த் வாய் திறந்தான். வருண் வேதாவ பத்தி ஏதாது தெரிஞ்சுதா??? எப்பவாச்சும் அவள பாத்தியா??? இப்போ எங்க இருக்கா??? கேள்விகள் நீள வருணின் தரப்பிலிருந்து அர்த்தமற்ற சிரிப்பு மட்டுமே மிச்சமானது. அரவிந்த் சற்று குழம்பியவனாய் என்னடா சிரிக்கிற???? கேட்டதுக்கு பதில் சொல்லு. இருவரும் நின்று கொண்டிருக்க ஆரன் சத்தம் காதை பிளக்க ஊகிக்கப்பட்டது பேருந்தின் வரவு.
__ தொடரும்.


  • எழுதியவர் : கார்த்திகா பாண்டியன்
  • நாள் : 13-Aug-17, 1:01 am
  • சேர்த்தது : Karthika Pandian
  • பார்வை : 219
Close (X)

0 (0)
  

மேலே