வாழ்வியல் நெறிகளை அடையாளம் காண தேடல் வேண்டும்

மாயக்கண்ணனென்றார்...
மயக்கும் புல்லாங்குழல் இசைப்பவனென்றார்...
வேண்ணெய் திருடனென்றார்...
மாதரை கவரும் கிருஷ்ணனென்றார்...
உடலை மட்டுமே கண்டார்...
ஆன்மாவைக் காணவில்லை...
ஆன்மா உரைத்த தத்துவங்களை அறியவில்லை...

மயக்கும் குயிலோசையாய் பரமாத்மாவின் குழலோசை கீதம் பாட,
அதைக் கேட்டு மயிலாய் நானும் ஆட்டமாட,
கிறிஸ்துவும், கிருஷ்ணனும் ஒன்றென ஞானம் தோன்ற சித்தம் பாடுதே அல்லா, அல்லாவென்று...

தேடல் அன்பானால், கருணையானால் யாவும் ஒன்றென்ற ஒற்றுமை நெறிப்பட வாழ்க்கை அமைய கடவுளின் தரிசனம் கிட்டும் இயற்கையில்...

யாதுமாகி நின்றவனிடத்து சரண் புகுந்து ஆன்ம சுத்தம் பெற்று விருப்பும், வெறுப்புமின்றி நற்கர்மம் ஆற்றிட உள்ளிருந்து ஒரு குரல் உண்மையின் வடிவாய் கேட்க வெளியிலிருந்து ஒரு குரல் கேட்கிறது சத்தியத்தின் வடிவாய்...

தாய், தந்தைக்கெல்லாம் தாய், தந்தையாய் ஆன பரம்பொருளிடம் சிந்தை செலுத்தினால் என்றுமே மனதில் தோன்றாது எதிர்மறை...
நல்வழியில் வாழ்ந்து வழிகாட்டிடும் நேர்மறை...

இளமைக்கால கிருஷ்ணனை அறிந்து விரும்பும் அனைவரும் முதுமைக்கால கிருஷ்ணனை அறிந்து கொண்டால் தெளிவு ஏற்படும் வாழ்வியல் நெறிகளில்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (14-Aug-17, 5:23 pm)
பார்வை : 432

மேலே