ஒரு தொடர்
இந்த தொடர் முற்றிலும் ஒரு உண்மைச் சம்பவமே..இது யாரையும் குறிப்பிட்டு அல்ல...
வாழ்க்கை என்னும் பாடத்தை முழுவதுமாக படிச்சவங்க இந்த உலகத்தில் யாரும் இல்லை.
அடுத்த நொடி என்ன நடக்கும்னு தெரியாத வரை தான் நிம்மதி..
என்னடா எடுத்ததும் வாழ்க்கை பாடம் ..அப்டி இப்டிநு எழுதிருக்கான் .. முழுசா ஒரு சோகமான கதைய எழுதிருக்கான்னு தயவு செஞ்சு நெனச்சுடாதிங்க...எல்லாரோட வாழ்க்கையை போலவே ,இந்த கதையில் சோகமும் ஒரு அத்தியாயம் ...
சரி .. உங்கள ரொம்ப நேரம் வேஸ்ட் பண்ணாம நேரடிய கதைக்கே போய்டுறேன்..
அருண்.... அட வேற யாரும் இல்லைங்க.. நம்ம கதையோட கதாநாயகன்... சாதாரண மிடில் கிளாஸ் குடும்ப பையன்..
இப்போதைக்கு நம்ம ஹீரோக்கு இந்த அறிமுகம் போதும்ங்க.. மத்தத போக போக கதைய்லயே நீங்க தெரிஞ்சுகுவிங்க..
சரி.. பையன்..மிடில் கிளாஸ் குடும்பம்.. கண்டிப்பா ஒரு பொண்ண லவ் பண்ணிருப்பான்.. காதல்ல தோத்துருப்பான்.. கஷ்ட பட்டு ..வேர்வை சிந்தி முன்னுக்கு வந்துருப்பான்.. இதான கதை ..அப்டின்னு நெனைக்குரவங்களுகாக .. ஒன்னே ஒன்னு சொல்லிக்க ஆசைபடுரேங்க...நீங்க நெனச்சது நூத்துக்கு நூறு உண்மை தாங்க... இது உண்மை கதைன்றதாள சினிமால வர்ற மாத்ரி இல்லாம.. கொஞ்சம் மாறுபட்டு இருக்கும்னு நான் சொல்ரத விட , நீங்களே படிச்சு தெரிஞ்சுகோங்க....
(பில்டப்பு ஓவரா இருக்குயா யோவ்... எனக்கே புரிதுங்க) ..
அருண் ஒரு கல்லூரில கடைசி வருஷம் படிக்குராறு.. வீட்டுக்கு மூத்த பையன்... அதனால கொஞ்சம் பொறுப்பும் ஜாஸ்தி... அதட்டலான அப்பா .. அன்பான அம்மா..பாசமான தம்பி..
கல்லூரில முதல் மார்க் வாங்குற மாணவன்..சிகரெட், மது நு எந்த கெட்ட பழக்கமும் இல்லாத , மொத்ததுல ஒரு டீடோடள்ளர்..
(இன்னுமும் கதாநாயகி பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லாம இருக்கறேன்னு நெனைக்குரிங்களா--- கதாநயகன விட கதாநாயகிக்கு எப்போவுமே பில்டுப் அதிகமா குடுகனும்ல..அதுக்காக தான்).... கதாநாயகி வேற லெவல் .... (To Be Continued...)