காதல் பழக வா-30

காதல் பழக வா-30
காதல் யாகம் ஒன்றை
உன்னோடு வளர்த்து
என்னையே காணிக்கை
தருகிறேன்...

என் காதல் வானிலே
ஒற்றை நிலவாய்
என்கரம் கோர்த்து
குடும்பம் நடத்த வா வெண்ணிலா...

காலங்கள் கடந்து
ஊர்வலம் போவோம்
நம் காதல் கீதம்
எத்திசையெங்கும் முழங்கிடவே...

இறுதி ஊர்வலம் போனாலும்
ஒன்றாய் போவோம்
மேகங்கள் மழைத்தூவ
நம் காதல் சிறகிலே...
என்னோடு வா மதுமதியே....

"என்ன ராம், உன்னை தண்ணி தானே எடுத்துட்டு வர சொன்னேன்,என்ன பண்ணிகிட்டு இருக்க இங்க"
"இல்ல கண்ணா அது வந்து, ராதி இங்க நான் தண்ணி தான் எடுக்க வந்தேன்""

"ஓஹோ, நம்பிட்டேன், நீங்க தண்ணி தான் எடுக்க வந்திங்களா, நான் கூட மதுவோட ரொமான்ஸ் மட்டுமே பண்ண வந்திகளாக்கும்னு நினைச்சிட்டேன்"

"என்ன ராதி நீ வேற இப்படி கால வாறறியே"

"என்ன ராதி என் ராமை பத்தி என்ன நினச்ச, நீ பாட்டுக்கு என்னென்னவோ பேசிட்டே போறியே, ராம் அவன் பேருக்கேத்த மாதிரி ஸ்ரீராமன் தான், தெரிஞ்சிக்கோ"

"ஆஹான், அதான் தெரியுதே, ஸ்ரீராமனின் லீலைகளை இப்போ தானே பார்த்தேன்"

"என்ன ராதி, சொல்ல சொல்ல நீபாட்டுக்கு லீலைனுலாம் பேசிட்டே போற, ராம் மதுவை தவிர வேற யார்கிட்டயும் எந்த லீலையும் செய்ய மாட்டான், என்ன ராம் சரி தானே"

" நீயுமாடா, காப்பாத்த வந்தேன்னு பார்த்தா காலவாரிவிடறயே, நல்லா வருவடா, உனக்கு ராதியே பரவால்ல, நான் இடத்தை காலி பண்றேன், இல்லனா கிண்டல் பண்ணியே நீங்க என்னை காலிபண்ணிடுவீங்க"

சிரித்துப்படியே ராம் அங்கிருந்து நகர ராதியும் கண்ணனும் கண்களாலே காதல் பேச ஆரம்பித்துவிட்டனர்...

"ஏங்க,உங்களுக்கு புரியுதா"

"அதானே, நல்லாவே புரியுது, ஆனா கிச்சேன்ல வேண்டாம், ரூம்க்கு போய்டுவோமா"

"ச்சீ அதில்லேங்க, ராமும் மதுவும் ஒருத்தருக்கொருத்தர் விரும்பறாங்க, முதல் பார்வையிலேயே பிடிச்சி போயிடுச்சி போல, அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சா என்ன"

"ஓஹோ, அத சொல்றியா, நான் கூட நம்மள பத்தியோன்னு நினைச்சிட்டேன்"

"நல்லா நினைப்பிங்க, முதல்ல நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க"

"அதனால என்னடி, நம்மள பத்தி யோசிக்கறதுல என்ன தப்பு, நாம கூட புதுசா கல்யாணம் பண்ண ஜோடி தானே"

"ஹையோ போதும்ங்க, ராம் விஷயத்துக்கு வாங்களேன்"

"அப்போ நீ இன்னும் கொஞ்சம் கிட்ட வாயேன்,

"வர மாட்டேன், நீங்க ஒன்னும் சொல்ல வேண்டாம், இத பத்தி நான் வேற யார்கிட்டயாவது பேசிக்கிறேன்"

"அச்சச்சோ, என் செல்லம் கோவிச்சிக்கிச்சோ, நான் ராம் பத்தி தாண்டி பேச கூப்பிடறேன், கிட்ட வா, ஒரு உண்மை சொல்றேன்"

"நிஜமாவா"

"பின்ன பொய்யாவா"

"ம்ம்ம்...கிட்ட வந்துட்டேன், இப்போ சொல்லுங்க"

அவள் அருகில் வந்த அடுத்த நொடி இறுக்கி அணைத்து அவள் கன்னத்தில் அழுத்தமாய் ஒரு முத்தமிட்டான்...

"எங்க நீங்க, இப்டி பண்றிங்களே"என்று ராதி சினுங்க "எப்படி பண்றேன்ங்க" என மீண்டும் அவளை இழுத்து அணைத்தான்...

"ஹையோ, யாராவது வந்துட போறாங்க, என்ன விடுங்க முதல்ல"

"அதெல்லாத்தையும் ராம் பார்த்துக்குவான், அவனுக்கு தான் தெரியுமே, நாம இங்க தனியா ஒண்ணா இருக்கோம்னு அதனால அவன் வேற யாரையும் இப்போ இங்க வர விட மாட்டான்"

"நல்ல பிரெண்ட்ஸ், அதுக்காக பட்ட பகல்ல எல்லாரும் இருக்கும்போதே இப்படியா"

"எல்லாரும் எங்கடி இருக்காங்க, உன் ஆசை அத்தானும், என் ஆசை பொண்டாட்டியும் தானே இங்க இருக்கோம்"

"அச்சோ, போதும்ங்க, அத்தை தேடிட்டு இருப்பாங்க,எல்லாரும் சாப்பிட உட்கார்ந்திருப்பாங்க இப்போ, நாம அங்க இல்லனா, எதாவது நினைச்சிப்பாங்க, போகலாம் வாங்க"

"ராதி ஒரு நிமிஷம்"

என்ன என்று கண்களாலே ராதி கேள்வி கேட்க கண்ணன் மெதுவாக அவளின் கைகளை பிடித்துக்கொண்டு சொன்னான்...

"ராம்க்கும், மதுவுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கறது என் பொறுப்பு, அவங்க ரெண்டு பெரும் ரொம்ப நல்லவங்க, பொருத்தமான ஜோடி, சீக்கிரம் இத பத்தி வீட்ல பேசறேன், நீ கவலைய விடு"

கண்ணன் இதை சொன்னதும் ராதி சந்தோஷத்தில் அவன் அருகில் சென்று அவன் கண் இமைக்கும் நேரத்தில் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு அங்கிருந்து வெளியே ஓடிவிட்டாள்...

"அடி கள்ளி,ஓடிட்டயா, உன்னை அப்புறம் பாத்துக்கறேன்" என்றபடி செல்லமாக அவளை கோவித்துக்கொண்டு கன்னத்தை வருடி பார்த்தபடி டைனிங் ஹாலுக்கு வந்து சேர்ந்தான் கண்ணன்...

கண்ணன், ராதியின் காதல் எந்த அளவுக்கு பலமானதோ அதே அளவுக்கு ராம், மதுவின் காதலும் பலமாகிக்கொண்டே போனது...

கண்களாலேயே பேசிக்கொண்டனர், ஒருவருக்கொருவர் என்ன பிடிக்கும் பிடிக்காதென்று புரிந்துகொள்ள முயற்சி செய்தனர், அன்றைய ஓர் நாளில் பல ஜென்மங்களில் பேசிக்கொள்ள வேண்டியதெல்லாம் யாரும் அறியாமல் மௌனமொழியில் பேசிக்கொண்டு காதல் யாகம் ஒன்றை வளர்க்க ஆரம்பித்திருந்தனர்...
எல்லாம் எளிதாக முடிந்துவிட்டால் மனிதர்களின் கதையை எழுதுபவனுக்கு வேலை இல்லாமல் போய்விடுமே, அவர்களே எதிர்பாரா ஒரு திருப்பத்தை அடுத்த நாளில் தொடங்கி வைக்க விதி காத்திருந்தது....

எழுதியவர் : ராணிகோவிந் (17-Aug-17, 11:58 am)
பார்வை : 547

மேலே