நட்பில் ஒரு காதல்

கல்லூரி எனும் பூந்தோட்டத்தில்
ஆயிரம் நண்பர்களிடம்
வீசாத ஒரு வாசத்தினை
கண்டேன்!
அழகி அவளிடத்தில்
அதனை காதலென்று
நானும் உணரத் தொடங்கினேன்!!,

இவ்வாறு"

அன்பு தோழிகள்
பலருக்கு இடம் கொடுத்தேன்
தோள்களில்!
ஆயினும் தோகை மயில்
அவளுக்கு மட்டுமே
என் இதயத்தில் இடம் கொடுத்தேன்!!,

பகல்கள் எல்லாம்
இவள் பார்வைகள்
என் மேல் வீச
பாச வலைகளில் சிக்கி
பாவி மனம்
பின் தொடர்ந்து சென்றது!
பாவை அவளிடம்!!,

பகலில் வீசிய
பாசவலைகள் எல்லாம்
நேசமாக காணத்தொடங்கினேன்!
என் கனவு தேசத்தில்!!,

கண்களுக்கு மட்டும் தெரிந்த
என் கனவுகளில்
சில நாட்கள்
கடவுளும் குடிப்பெயர்ந்தான்,

காலைத் தேநீர்
என்னை எழுப்பும் வேளையிலும்
கனவு தென்றல்
மிதக்க வைத்தது மயக்கத்தில்,


தனி இரசனை என்பது
வளர்ந்த நாள்முதல்
என்னிடம் உள்ளது!
இருந்தும்
அதனை
முதல்முறையாக
முகவரி தெரியாத முழுநிலவு
அவளிடம் கண்டேன் முழுமையாக!!,

அவள் பேசும்வேளைகளில்
என் வார்த்தைகள்
சிக்கி தவித்தது!
சின்ன பார்வைகளில்
இருந்து மீள முடியாமல்!!,

தோழியாக வந்த அவள்
உறவா?
இல்லை
உடன் வரும் வாழ்வா?
என நினைத்து
உறங்க முடியாமல்
விழிக்கத் தொடங்கினேன்
சில இரவுகளில்!,

தோழி என்ற உறவில் வந்தவள்
தொடர்நாது கலந்தாள்!
என் உயிரில்
உயிராக!!,

நான் சுவாசிக்கும் நேரங்களில்
இவளையும் சேர்ந்து
சுவாசிக்க தொடங்கினேன்!
சுவாசமாக வந்தவள்
என் இதய சுவர்களை
சொந்தமாக்கிக் கொண்டாள்!!,

நாட்கள் போனது
நம்பிக்கை வளர்ந்தது
என்னுள்!
நாங்கள் காதலர்கள் என்று!!,

நட்பு என்னும்
உறவில்
காதல் என்ற
கரு உருவானது!
கலைப்பதா?!
காப்பாற்றுவதா?!
என தெரியாமலே
காலங்களை கடந்து விட்டேன்!,

மறக்கவும் முடியவில்லை!
மறைக்கவும் முடியவில்ல!!
மணக்கவும் முடியவல்லை!!!
மனம் தாங்க முடியாமல்
கேட்கத் தொடங்கியது
சில கேள்விகளை!!,

ஆயிரம் கேள்விகள்
கேட்டும் என் பயன்?!
அவள் விழிகளை கண்தபோதெல்லாம்
விடை பெற்றேன்!
விடை பெறமுடியாமல்!!,

என் மனம்
எழுப்பிய கேள்விகளுக்கெல்லாம்
விடை இவளா?!
இல்லை
விதி எழுதிய
விடுகதைகளுக்கு
விடை இவளா?!
என புரியாமல் தவித்தேன்
பல நாட்களாக!!,

சில நேரம் பிரிவு
பல நேரம் சண்டை
பார்க்காத நேரம் எல்லாம் கோபம்
என்று நடந்துக் கொண்டவள்
சிறிது சிறிதாக
கொண்டு சென்றாள்
உன் உயிரை!,

இறக்கங்களை வைத்து
இதயம் படைத்த
இறைவன்
அதனை
இனம் ரீதியில்
படைத்து விட்டான்,

தோழியாக வந்தவள்
தோழனாக இருந்து இருந்தால்
ஆயுள் வரை
என் பின்னால்
வந்து இருப்பான்
நண்பனாக!,

ஆனால்
துன்பங்களில் மட்டுமே
துவண்ட என் இதயம்
தோகை மயில்
அவள்
தொடர்ந்து இன்பமாக வீச
தோழியாக நட்பில் வந்தவள்
என் வாழ்வில்
மாறத் தொடங்கினாள்
காதலியாக♥...
.........♥♥♥♥♥♥♥........................

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (19-Aug-17, 7:30 pm)
Tanglish : natpil oru kaadhal
பார்வை : 538

மேலே