யாருக்குச் சுதந்திரம்

யாருக்கு சுதந்திரம்..?
பலகோடி மக்கள் கொண்ட
நாட்டில்....
பாதையில் உள்ள பூக்களை..
பார்க்க நேரம் இன்றி செல்கிறோம்...
சுதந்திரம் பெற்ற நாடு எனினும்...
இன்னும் மறைமுக அடிமைகளாய்...
இருக்கிறோம்...
இரவில் பயணம் தனியே..
சென்றால்....
பெண்ணின் கற்பு...
கேள்வி குறி....?
கல்வி தேடி தனியார்...
நிறுவனம் நாடினால் ...
ஏழை கல்வி ஆனது...
கேள்வி குறி.....?
உயிர் காக்கும் மருத்துவமும்....
உருவாகி போனது கேள்வி குறி....?
தேவையில்லா இல்லா..
இலவசங்கள்...
தேவையான திட்டங்கள்...
எங்கே போனது கேள்வி குறி...?
இறந்த மனைவியை தோளில்....
சுமக்கிறான்....
காதலியை நிர்வாணமாக தோளில் சுமக்கிறான்.... யாருக்கு இங்கே சுதந்திரம்.....?
பணத்தின் கையில.....?
பணம் ஆளுபவர்களின் சட்டை பையிலா....?
இங்கே யாருக்கு உண்டு சுதந்திரம்....
நாட்டை காக்கும் விவசாயத்திற்கு....?
இல்லை....
நிலத்தை கூறுபோடும்....
மீத்தேன் பன்னாட்டு நிறுவனங்களுக்கா....?
கேள்வி குறி...
கேள்வி குறி.....
சுதந்திரம் என்றால் என்ன....?
கேள்வி குறி....?
சிந்திக்க நேரமில்லை....
எவருக்கும் நேரமில்லை....
By bmh arun