யாவும் கவிதையே
யாவும் எனக்கு
கவிதைகளே !
மகிழ்வில் திளைக்கும்
பிறப்பும்
துக்கம் வளர்க்கும்
இறப்பும்
இடையில்
நெகிழ்ந்து கரையும்
அன்பும்
குமைந்து துப்பும்
வெறுப்பும்
யாவும் எனக்கு
கவிதைகளே!
@இளவெண்மணியன்
யாவும் கவிதையே