கவிக்கோ சை-அப்துல் ரகுமான்

மதுரை வைகை ஆற்றின் தென்கரை
வட்டாரத்தில் ஓய்வெடுத்த சீர்மிகு உரூதுக்கவிதை உரித்தெரிந்து
புதுக்கவிதை ஒன்றை தமிழ்த்தாய்
ஈன்றெடுத்தாள்.

சேற்றில் மலர்ந்த செந்தாமரை போல்
கவிக்கோ எனும் ஊற்றில் மலர்ந்த வாடாத மலராக புதுக்கவிதை.

உச்சி வெயில் மினுமினுத்து நிற்க கோவில் கோபுரம் தன்னிலே அச்சு சாய்ந்திருக்க,கருவறை நடைப்பகுதி தாழிட்டு இறைவன் உறங்க, வாய் மூடாமல் விழித்திருந்த உண்டியல்
உமது நேர்த்தியான உள்ளுணர்வின்
ஆராதனை.

நிறைகுடமாய் தன்னை நிலையில் நிறுத்தி நிறைவாய் ஆன தமிழ்மகன்
அள்ள அள்ள குறையாத கவியிலே
கரைந்துப் போன கவிமகன்
தேர் சூடிய முல்லையைப் போல
புதுக்கவிதை சூட்டிய கவிக்கோவே.

இறுதியாக உனை சுமந்த பனையூர்
என்றும் உன் இறவா புகழ் சுமப்போர்
தமிழர்,உன் இறுதி மூச்சோடு தமிழ்
கலந்து எங்களை ஆளட்டும் உன்
புதுக்கவிதையோடு.

எழுதியவர் : சூர்யா.. மா (22-Aug-17, 9:17 pm)
பார்வை : 175

மேலே