தமிழ் திண்டிவனம்

இனம் தான் தமிழினம் தான்
வனம் தான் திண்டிவனம் தான்

போருக்கு புறமுதுகிட்டதில்லை...
யாரையும் முதுகில் குத்தியதில்லை...
பூவை நசுக்கியதில்லை...
புயலை நாளும் நெஞ்சுக்கு நேராய் தாங்குவதுண்டு...
தமிழ் என்றே சொல்லி சங்கே முழங்கு...

குமரிக்கண்டம் பார்த்ததில்லை
மதுரைச்சங்கமும் பார்த்ததில்லை
பார்த்ததெல்லாம் தமிழ்நாடு
தமிழு தந்த நம்ம ஊரு

உயிரும் மெய்யும் தமிழே
தமிழும் தாயும் ஒன்றே
எங்கள் தாய்மொழி தமிழ்மொழி
எங்கள் தாய்நாடு தமிழ்நாடு
எங்கள் தாயை மதித்து காப்போம் உயிரோடு...

ஆயுதத்தை மொழியில் கொண்டோம்
அதையே எங்கள் உயிராய் சுமப்போம்

வல்லினம் இடையினம் மெல்லினம்
தமிழினம்...
வல்லினம் இடையினம் மெல்லினம்
தமிழினம்...

ஏழு சீரும் எழும்
எழுதும் தமிழே கவி...

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (22-Aug-17, 5:18 pm)
பார்வை : 132

மேலே