பிரதிபலிப்பு

குலை குலையா முந்திரிக்கா.
நரியே நரியே சுத்தி வா.
கொள்ளையடிப்பவன் யாரு?..
இந்த மனுஷ பய தான் நல்லா பாரு...

மனித உடலைச் செதுக்கினால் கொலை...
மர உடலைச் செதுக்கினால் கலை...
மனிதக் கறி விற்றால் பாவம்...
விலங்குக் கறி விற்றால் லாபம்...

பூமித்தாயின் குருதியை மின் இயந்திரம் கொண்டு நிலத்தடி நீராய் உறிஞ்சும் இந்த மனிதர்களின் உடலில் இருந்து கொசு இரத்தத்தைக் குடித்தால் மட்டும் தவறு...

இதெல்லாம் மனித வர்க்கம் கொண்ட கொள்கை...
ஏற்படுத்திக் கொண்ட நியதிகள்...

கேளுங்கள் மானிடர்களே!
எந்தவொரு செயலுக்கும் அதற்கு இணையான எதிர் செயலுண்டு...
இதுவே இயற்கையின் நியதி...

உயிர்களைப் புசித்து மனிதம் மரித்த மனித உருக் கொண்ட விலங்குகளைப் புசிப்பது மட்டும் பாவமென்றும் தன்னைப் பாதுகாக்க முனைப்பாகச் செயல்படும் மனிதர்களே!
நீங்களும் நானும் இயற்கையின் முன் குற்றவாளிகள் தான்...

குற்றங்களை மட்டுமே களையெடுத்துக் கொண்டே போனால் மீண்டும் மீண்டும் குற்றங்களே வளரும்...
குற்றங்களைக் களையெடுத்த அவ்விடத்தில் நல்லவைகள் விதைப்பட வேண்டும்...
அப்போதே குற்றங்கள் வேரறுக்கப்படும்...
இல்லையெனில் உங்களையும் என்னையும் காக்க அந்த ஆண்டவனாலும் இயலாது...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (23-Aug-17, 6:28 pm)
பார்வை : 495

மேலே