மரண பிரளயம்

குத்தீட்டி கொண்டு துளைத்தெடுக்கப்பட்ட சரீரத்திலிருந்து
திமிறி எழுந்து நிலைகுலைந்து சல்லடையாகி வீழ்கிறது அந்த ஆன்மா...

சூரியன் அஸ்தமித்த நாளொன்றில்,
இருள் போர்த்திய கும்மிருட்டுகளில்
நடை இடறி
பாதாள பாறை பிளவுகளில் அகப்பட்ட பின் விடியலே இல்லாமல் போய்விட்டது..

தூரத்து இடி முழக்கம் செவிப்பறையை கிழித்து,
வெருண்டோடிய இடமெல்லாம் மேனி எல்லாம் மின்னல் பட்டு கருக,
இரத்தம் புசிக்கும் தனித்த ஓநாய்யொன்றின் காலடி சப்தத்தை சமீபத்தில் உணர்ந்தும் துர்மரணத்தை நோக்கி மனம் நிலை இல்லாமல் துரத்தியது..

இதயத்தை போர்த்தியிருந்த எலும்பு கூட்டை,
யானை ஏறி துவசம் செய்து பிளிறியதும்,
மதயானை கூட்டமொன்று பூமி அதிர ஓடி வந்து உசுரையும் சேர்த்து மண்ணோடு மண்ணாக்கி கடந்து சென்றது..

கருவிலிருந்த எடுத்து
இயற்கை எய்தும் முன்னரே
கடுந்தீயில் கதற கூட இடங்கொடுக்காமல்
கொடுவாள் முனை கொண்டு சாம்பலாகி,
இரத்த வெறி மூர்க்களின் மூஞ்சியில் முழிக்காமல்,
முகத்திலடித்தாற் போல மரணித்த சிசு போல.
அமுக்குவான் பேய்களின் ஆட்சியில் கட்டுண்டு கிடந்தேன்..

கடிவாளம் அற்ற குதிரையொன்றின் கனைப்பு சப்தத்தில்
கனவு கலைந்ததும்,
உயிர் வந்ததே போதும் என அலறி விட்டு,
இலகுவான மரணத்துக்காக உதடுகள் ஜெபிக்க ஆரம்பித்து விட்டது இறைவனிடத்து..

எழுதியவர் : சையது சேக் (26-Aug-17, 4:38 pm)
பார்வை : 787

மேலே