அறுவை ரம்பம்

தற்கொலை செய்வது கோழைத்தனம்.
வாழ்க்கையில் எவ்வளவு கவலை வந்தாலும் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் எனக்கு வராது...
என் கவலை உனக்கு இல்லை என்று சொல்லாதீர்.
கவலை இல்லா மனிதனே கிடையாது.
வாழ்க்கை என்றால் எல்லாம் இருந்தால் தான் வாழ்க்கை...
தீ ஒளியாகும்...
சுடும்...
இது தான் வாழ்க்கையின் நியதியும்...
நட்பே ...போ .... ...சிரிக்க வைக்கல..
எனக்கு எல்லாரையும் சிரிக்க வைக்கணும்...
(அறிவுரை சொல்றது சுலபம்.
அதன்படி நடந்து பாருங்க...
எனக்கு அறிவுரை (மொக்க ) சுத்தமா பிடிக்காது.
எல்லாமே திருக்குறள்(திருக்குறளை மதிப்பெண்ணிற்காய் படிக்கிறோம்.மதிப்பாய் நடப்பதற்கு???) போல
ஒரு வார்த்தை தான்...
முதல்ல அறிவுரை சொல்ற
அளவுக்கு
நாம அத கடைபிடிக்கணுமே.
நம்ம ஊர்ல எல்லாம்
இங்கே சிறுநீர் கழிக்காதே...
என்று எழுதி இருக்கும்.
முதல்ல அங்க தான்
சிறுநீரே கழிப்பாங்க.
தமிழ்நாட்டிலேயே இரண்டாவது பெரிய பேருந்து நிலையம் என்று படித்த ஞாபகம்...
(அது பள்ளத்ல கட்டியது (அதுவேறு).நம்ம ஊர்ல(தமிழ்நாட்ல) எல்லா அரசு அலுவலகமும் ஏரியில தானே இருக்கு.அதுனால தான் விழுப்புரம் பேருந்து நிலையம் சின்ன மழைக்கும் முட்டிக்கால் அளவு தண்ணீ நிக்குது)
விழுப்புரம் பேருந்து நிலையம்...
அய்யோ வாசனை ஆளை தூக்கும்...
இப்பொழுது கொஞ்சம் மாற்றம் வருகிறது...
சுத்த விழுப்புரம் என்று...
தொடர்ந்து நீடித்தால் சரி...
அரசு மட்டுமல்ல அரசாங்கம் மட்டுமல்ல
மக்களும் ஒத்துழைப்பு தந்தாலே எதுவும் சாத்தியம்...)
ஆனால் உங்கள் படைப்புகள் ஏன் அதிகம் மரணத்தில் முடிகிறது ?
ஏன் என் கவிதைகள் அதிகம் என் மரணத்திலேயே முடிக்கிறேன் என்பது தானே உன் எண்ணம்.
என்னோட குடும்பம்...நண்பர்களை காக்க
பெறுமதியான என் உயிரையும் தருவேன் அவ்ளோ தான்...
என் மழலையை கொல்ல வரும்பொழுது நான் ஓய்ந்திருக்க முடியுமா...
உயிர் இருக்கும் வரை எதிர்த்து நிற்பேன் ...காப்பேன்...எதிரியை வெல்ல இயன்றால் வெல்வேன் நேர்மையாக...
இல்லையேல் என் மழலையை காத்துக்கொண்டிருப்பேன்.
என் மழலையை தாக்க வரும் குண்டுகள் முதலில் என்னை தாக்கட்டும்..
நான் உயிரோடு இருக்கும் வரை என் மழலையை காப்பேன்.
என் மழலையை காப்பாற்ற வாழவும் செய்வேன்...
என் மழலையை காப்பாற்ற
சாகவும் செய்வேன்...
எனக்கு இந்த இயற்கை..இசை...காடு...
மலை...அருவி...பறவை...பூக்கள்... உலகை ரொம்ப ரொம்ப ..........பிடிக்கும்.
நானாக என்னை அழித்துக் கொல்லவே மாட்டேன்.
என் பிறப்பு போலவே
என் இறப்பும் எழுதப்பட்ட நியதி...
நான் வாழப் பிறந்திருக்கிறேன்.
வாழ்கிறேன்...
எல்லோரையும் சந்தோசமாக பார்த்துக் கொள்ள வேண்டும்...
வாழ்க்கையின் இயல்பை அனுபவிக்கிறேன்...
வெற்றிக்கு வாய் பிளக்க வில்லை...
தோல்விக்கு துவண்டதில்லை...
எனக்கு பூவை போல வாழவேண்டும்...
மீண்டும் மீண்டும்
பிறந்து வாழ்ந்து இறந்தாலும்
எந்த சலனமும் இல்லை...
எல்லோருக்கும் நன்மையே செய்ய வேண்டும்.
பேருந்தில் அருகில்
ஒரு குழந்தை...
என் கையை பிடித்துக்கொண்டு
வளையல்களோடு விளையாடியது...
நான் அக்குழந்தையோடு
மழலையாகி விளையாடி விட்டு இறங்கினேன்.
வழியில் ஒரு பாட்டி கீழே விழ பார்த்தார்கள் தாங்கி பிடித்தேன்...
வரும் வழியில் தென்றல் காற்று...
இளையராஜா பாடல்...
அப்பப்பா...செம....
என் தாயின் மடியில் உறக்கம்...
கடற்கரை மணலில் விளையாட்டு...
கண்ணாமூச்சி ஆட்டம்...
கபடி பாடி வருவது....
நிலாச்சோறு...
அண்ணன் தங்கை பாசம்..
பூக்கள் மீது பட்டாம்பூச்சி...
புல் நுனி பனி...பாதம் வருடுவது....
வாழ்க்கை முழுக்க மிகவும் உயர்ந்த உணர்வுகள்...
வாழ்ந்து பாருங்கள்...
ஹா..ஹா..ரம்பம் போட்டுட்டேன்