இலையுதிர் காலம்
இலையுதிர் காலம்... (autumn season... Melody...)
இனிய இசையில்...
இலையுதிர் காலத்தின் தொடக்கம்...
இறகுகள் முளைத்து..
இலைகள்...
காற்றில் பறந்து செல்கின்றன...
மெல்ல மெல்ல...
கீழே இறங்குகின்றன...!
மெல்ல மெல்ல...
கீழே இறங்குகின்றன....!
தலைச் சுற்றிலும் மேலே..
கால் சுற்றிலும் கீழே...
எங்கும் வண்ணமயமான இலைகள்..
கரோட்டினாய்டுகள், ஆந்தோசயானின்கள்,
நிறமிகள் செய்த அதிசயம்...
நிறம் மாறும் மாபில் மரங்கள்...!
நிறம் மாறும் மாபில் மரங்கள்....!
சிவப்பு வண்ண இலைகளின் ..
சிதறல்கள் இந்த ...
சோனாமா நாட்டின்...
சிறுநடைப்பாதையின் மேலே..
இருப்பக்கங்களும் ரெட் மாபில் மரங்கள்...
கிளைகள் உதிர்கும் இலைகள்...
தனியே நடக்கிறேன்...!
தனியே நடக்கிறேன்....!
பறந்து வரும் இலைகள்...
இதயம் மோதுகிறது..
என்னை விளையாட..
அழைக்கிறது...
(இருபது) அகவையிலும்..
சின்ன குழந்தைப்போல்...
ஓடுகிறேன்...
இலைகளை பிடிக்கிறேன்....!
இலைகளை பிடிக்கிறேன்....!
இலைகளை தூக்கிச்செல்லும்..
எறும்புகள்..
நானும் அவைகளில் ஒன்றாய் மாறி..
உதவிட மனம் வருகிறது...
உள்ளம் மழைப் பொழிகிறது.....!
கார்காலம் வருகை முன்னே...!
கார்காலம் வருகை முன்னே... !
By bmh arun....