அழகான பெண்மை ..

உன் கோபங்களை எல்லாம் பொறுத்து கொள்ள ..
உன் திட்டல்களை எல்லாம் தாங்கி கொள்ள ..
நீ சொல்வதெற்கெல்லாம் தலை ஆட்ட தெரிந்த தலையாட்டி பொம்மையாய் நான் இருப்பது
உனக்கென்னவோ ஆண் ஆதிக்கத்தை அடைந்து விட்ட உணர்வு தான் ...
அப்பொழுது கூட அன்பிற்கு முன் அடி பணிந்து போகும் அழகான பெண்மையை தான் உணர முடிகிறது என்னால் ....