தமிழ் உணர்வோடு ஒன்றுபடு

அலங்கரிக்கப்பட்ட தேரானது காத்துக்கொண்டிருக்கிறது,
அந்த தேரை இழுத்துச்செல்ல போதுமான சக்தி நம்மிடையே இல்லாத காரணத்தால்.

ஒரு சில நல்ல சக்திகளுடன் இழுப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டாளும்,
அதை முன்னேறவிடாமல் பின்னோக்கி இழுப்பதற்கான
ஜாதியவாத,மதவாத சக்திகளே நம்மில் அதிகம் இருக்கிறது.
அதை போலத்தான்,
நம்மிடையே போராட்டத்திற்கான காரணங்கள் ஏராளம்.
ஆனால் அதை வழிநடத்துபவர்களை காட்டிலும்
அதை தடைசெய்யும் கூட்டமே நம்மிடையே அதிகம்.
ஆகவே ஜாதியவாத,மதவாத கொள்கைகளை களைந்து
தமிழ் தேசிய உணர்வோடு ஒன்றுபட்டால் மட்டுமே
நம் போராட்டமானது வலுப்பெரும்
போராட்டதிற்கான காரணம் நிலையான முடிவைப்பெறும்.

எழுதியவர் : கு.கார்த்திக். (28-Aug-17, 1:12 pm)
பார்வை : 152

சிறந்த கவிதைகள்

மேலே