நெருப்பு நிலா
அவன் கவித்துவம் கண்ட
வானமும்
வந்து வாழ்த்தும்.
நெருப்பைப் பற்றி
அவன் கவிதை எழுதினால்
தாள் தீப்பற்றிக் கொள்ளும்.
அவன் பேச்சைக் கேட்ட
மின்னலும் மூச்சை நிறுத்தும்.
புரட்சியை அவன் பேசினால்
நத்தையாய் ஒடுங்கும் ஆமையும்
சிறுத்தையாய் சிலிர்த்தெழும்.
- கேப்டன் யாசீன்