சதி
சட்டம் பேச வாய்ப்பில்லை சாமானியனாய் பிறந்தமையால்,
தட்டிக் கேட்கும் அதிகாரம் தானாய் பறிக்கப் பட,
தகுதி இழந்தேன் ஜாதியெனும் சாக்கடையில் சிக்கி,
விட்டுத் தள்ள முடியவில்லை வீண் வாத விளக்கங்களை,
சற்றும் தணியவில்லை சாக்கடை நாற்றம்,
சாமானியனின் சாம்ராஜ்யங்கள் தட்டி நொறுக்கப்பட ,
சத்தமில்லா வேடிக்கையே நித்தம் நிலவுகிறது,
வாகனம் வேண்டாம் வயிற்றுக்கு சோறு,
மனமில்லாமல் வாழ்கிறேன் மார்க்கம் கிடைக்கும் எனும் நம்பிக்கையில் ,
சாதியை களையெடுக்கும் சாமானியனின் பதிவு.
,