ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தர்மம்

ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு தர்மம் !
சாதுவோ
கிரகஸ்தரோ..
ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு தர்மம் !
அவரவர் தர்மத்தில்
அவரவர் வாழ்வர்..!

இரைக்கு எம்முயற்சியும்
செய்யா மலைசர்ப்பம்..
அதனுள் ஒரு
யோகியின் சரணாகதி..!

எனைப் படைத்தாய் !
என் தேவையறிவாய் !
அளிப்பாய்.. எனக் கிடக்கும் !
தன் முன் தோன்றுவதை புசிக்கும்...

நம் பார்வையில்
ஞானிகள் சோம்பித் தெரியலாம்
மெய்யெது எனில்
ஞானிகளின் இருப்பே
உலகினிற்கு நன்மை..

ஞானானுபவத்தில் நிதம்
திளைப்பவருக்கு உணவு வரும்..
எங்கிருந்தோ... எப்படியோ...
இறை உந்துதலால் !!

அவர்க்கு அன்னமிடுபவரையும்
மகா பாக்கியங் சேரும்...
இறையே கதியென்போரை
இறையே பார்த்துக்கொள்வான்..

யாதும் திருமுன்
தானாய் நடக்கும் !!
நாம் தான் நடத்துகிறோம்
என்ற எண்ணமறுத்தல் வேண்டும்..
தன் தர்மம் கண்டு
தான் தொடர்ந்தால் நலம்..

எழுதியவர் : (30-Aug-17, 5:50 pm)
பார்வை : 352

மேலே