அவன் அவளாக
....அவன் அவளாக....
அவனாகப் பிறந்த நான்
அவளாக மாறாமல்
இருந்திருந்தால்
புழுவாக எனை நோக்கும்
சமூகப் பார்வைகளிலிருந்து
தப்பிப் பிழைத்திருப்பேன்..
உணர்வுகளில் மாறிய நான்
உடலுருவில் மாற்றம்
காணாமல் இருந்திருந்தால்
ஏளனப் பேச்சுக்களையும்
எடுத்தெறிந்து பேசும்
வார்த்தைகளையும்
கேட்காமல் போயிருப்பேன்...
இறைத்தூரிகை வரைந்த
கோலத்தில் என் பால்
முப்பாலாய் கலக்காமல்
இருந்திருந்தால்
கண்ணீரில் தினம் தினம்
கரையாமல் போயிருப்பேன்...
ஹார்மோன்கள் செய்யும்
மாற்றங்களை
இயல்பென்றே இதயங்கள்
ஏற்றிருந்தால்
பெற்ற அன்னையே
அடித்துத் துரத்தும் நிலைக்கு
நானும் ஆளாகாமல்
இருந்திருப்பேன்...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
