என் உயிரினும் மேலான - நெடுந்தொடர் - - - பாகம் 1

கடலூர் மஞ்சை நகர் கிரிக்கெட் மைதானமே அமைதியாக அடுத்த பந்தை வீசப்போகும் விழுப்புரம் மாவட்ட அணியின் புயல்வேக பந்துவீச்சாளர் டேவிட்டையும் பந்தை எதிர்கொள்ளப்போகும் கடலூரின் சரவெடி பிரவீனையும் பார்த்துக்கொண்டிருந்தன. இப்படி ஒரு விறுவிறுப்பான போட்டி இதுவரை யாரும் கண்டிருக்க மாட்டார்கள். போட்டி கடலூரில் நடைபெறுவதால் ப்ரவீனுக்கான கூட்டம் அதிகமாய் இருந்தது. இந்த பதற்றத்தின் பின்னணி இதுவரை கடலூரில் இருந்து பிரிக்கப்பட்ட புதிய மாவட்டமான விழுப்புரம், மாவட்ட வாரியான போட்டிகளில் மூன்று முறை இறுதிப்போட்டிக்கு வந்து தோற்றிருக்கிறது. அதில் இரண்டு போட்டிகள் கடலூருடன். இம்முறை வலுப்பெற்ற அணியாக அனைத்து போட்டிகளையும் வென்று இறுதிப்போட்டியில் ஆடுகிறது விழுப்புரம். அதே சமயம், கடலூர் இதுவரை ஏழு முறை கோப்பையை வென்றுள்ளது, நான்குமுறை இறுதிப்போட்டியில் ஆடி தோற்றுள்ளது. அதில் ஐந்து வெற்றிகள் பிரவீனின் தலைமையில். ஆனால் இம்முறை ஆதிக்கம் என்னவோ விழுப்புரம் தான் செலுத்தியது. வெற்றியும் கூட விழுப்புரம் பக்கமே அதிகம் இருந்தது. எட்டு பந்துகளில் இருபத்தொன்பது ஓட்டங்கள் எடுக்கவேண்டும் கடலூர் அணி. ஆனால் டேவிட் வீசப்போகும் இந்த இரண்டு பந்துகளில் தான் வெற்றியும் தோல்வியும் யாருக்கு என்பது அடங்கி இருப்பதாய் அனைவரும் உணர்ந்தனர். ஏனென்றால் அடுத்த ஓவரை வீசப்போகும் நபர் யாராயினும் அவரது ஓவரை பதம் பார்ப்பது ப்ரவீனுக்கும் அவனுடன் எதிர் முனையில் விளையாடும் முபாரக் அலிக்கும் மிக சுலபம். ஆறு பந்துகளையும் கூட மைதானத்தை விட்டு வெளியே பறக்கவிடும் திறமை படைத்தவர்கள். ஆனால் டேவிட் ஒரு புயல்வேக திறமையான பந்துவீச்சாளர். இந்த இரண்டு பந்துகளை எதிர்கொள்ளும் பிரவீன் ஏற்கனவே பந்துவீசும் போது காலில் அடிபட்டு மிகவும் சோர்வாகவும் ஓடமுடியாமல் சிரமப்படும்படி இருப்பதால் போட்டி இன்னும் விறுவிறுப்பானது. டேவிட் பந்தை வீச ஓடி வர, பிரவீன் மனதில் என்ன தோன்றுகிறது, என்ன செய்யப்போகிறான் என்று அனைவரும் இருக்கையின் நுனியில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருக்க, டேவிட் வீசிய புயல்வேக பந்து பிரவீனின் நெஞ்சை பதம் பார்த்தது, சரிந்தான் பிரவீன். மைதானமே அமைதி ஆனது. ப்ரவீனால் போட்டியில் தொடர முடியுமா என்று நடுவர்கள் விசாரிக்க, சிரமத்துடன் "முடியும்" என்றான் பிரவீன். "டேய், லூசாடா நீ. ஒண்ணும் வேணாம், நீ போ, போய்ட்டு லெனினை அனுப்பு. நான் பாத்துக்கறேன்" என்றான் முபாரக். "இல்லடா, நான் ஆடறேன்" என்றான் பிரவீன். "கேக்கமாட்டியே...."சலித்துக்கொண்டான் முபாரக். மக்கள் பக்கத்தில் விழுப்புரம் ஆதரவாளர்கள் மத்தியில் இருந்து, "டேவிட் டேவிட்" என்று கோஷங்கள் வர, பிரவீன் அந்த பக்கமாக பார்க்கிறான். அங்கே அவன் உயிராக எண்ணும் விஜி இந்த நிமிடத்தை கொண்டாடுவதை கண்டு மிகவும் கவலை அடைந்தவனாய் முபாரக்கிடம் சொன்னான், "விஜி எனக்கு அடிபட்டா இவ்ளோ சந்தோஷப்படறாளா முபாரக், அவ சந்தோசம் தான் என் சந்தோஷமும், ஆனால் இந்த கிரிக்கெட் என் உயிருக்கும் மேல டா. இது எனக்கு உங்க எல்லாரோட நடப்பையும் குடுத்து வாழ்க்கையும் குடுத்தது. விஜியா இல்ல கிரிக்கெட்டா...நான் என்னடா பண்றது" என்று பேசியவாறே அடுத்த பந்தை எதிர்கொள்ள தயாரானான் பிரவீன். விஜியின் இந்த செயல் அவளோடு வந்திருந்த அவளின் தோழி காயத்ரிக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. "ஏய்....விஜி என்ன டி, பிரவீன்க்கு அடி பட்டிருக்கு, பதறாம செலெப்ரட் பண்ற....டோன்ட் யு லவ் ஹிம்?" என்றாள் காயத்ரி. "லவ் ஆஹ்....யாரு லவ் பண்றா? போடி லூசு, ஹி வாஸ் ஜஸ்ட் மை வெல் விஷர். இப்போ அதுவும் இல்ல. அவனை பாத்தாலே புடிக்கல, எரிச்சலா வருது. செண்டிமெண்ட் சைக்கோ. என்னை கூட ஒரு சென்டிமென்டல் இடியட்டா மாத்த பார்த்தான். கவர்ட் ஷிட்" என்றாள் விஜி. இதை சற்றும் எதிர்பாராத காயத்ரி, "ஏய் என்னடி ஆச்சு உனக்கு, என்ன பைத்தியமா உனக்கு, பிரவீன் தான் என் ரோல் மாடல் , அவனோட மெமரி சூப்பர், அவன் என் அப்பா அம்மா தங்கைக்கு அடுத்த ஸ்தானத்துல இருக்கான், அவன் இல்லன்னா நீ இல்ல, நீ சந்தோஷமா இருக்க காரணமே அவன்தான் அப்படி இப்படின்னு சொல்லுவ. நல்லவன், நல்ல டீம் பசங்க, எல்லாரும் நல்ல அன்பா இருப்பாங்க, அப்படியெல்லாம் சொல்லி என்னையும் அவங்களுக்கு இன்ட்ரோ பண்ணி வெச்ச, நான் பிரவீனை சைக்கோன்னு ஒருநாள் சொன்னதுக்கு என்னை பளார்னு அறைஞ்ச, என் அப்பா உன்கிட்ட ப்ரவீனும் முபாரக்கும் கால் பண்ராங்க அடிக்கடி, ஒரு பொண்ணுக்கு அடிக்கடி கால் பண்ணி பேசறது தப்புன்னு சொன்னதுக்கு, உங்க பொண்ணு ரொம்ப நல்லவளாவே இருக்கட்டும் இனிமே என்கிட்டே உங்க பொண்ணு பேசவேணாம்னு சொல்லுங்க. ப்ரவீனும் முபாரக்கும் இனிமே உங்க பொண்ணுக்கு கால் பண்ணமாட்டாங்கன்னு மூஞ்சில அடிச்சாப்ல சொல்லிட்டு என்கூட நாலு மாசம் பேசாம இருந்த. இதே பிரவீன் தான் அந்த பிராப்பளத்த சால்வ் பண்ணினான். திடீர்னு அவன்மேல் இருந்த அந்த காதல்.......சாரி.... பாசம் என்ன ஆச்சு" என்று கேட்டாள் காயத்ரி. ."பெமிலியரிட்டி பிரீட்ஸ் கான்டெம்ப்ட்.அவனோட நெருங்கி பழகும்போது தான் அவனோட சென்டிமென்டல் இஷ்யூஸ் புரிஞ்சுது, சரி அது எதுக்கு இப்போ நமக்கு, பிரவீன் இஸ் நோ மோர் இன் மை ஹார்ட். அண்ட் ஹி வில் நெவர் கம் இன்சைட் மை ஹார்ட் எனிமோர்." என்றாள் விஜி. டேவிட் ஓடிவந்து வீசிய கடைசி பந்து தெறித்து சிதறியது விழுப்புரம் ரசிகர்கள் இருந்த இடத்தில். அற்புதமான சிக்ஸர் ஒன்றை விளாசினான் பிரவீன். சற்றும் எதிர்பாராத விஜியும் மற்ற ஆதரவாளர்களும் அமைதியாக, விஜியின் முகமோ கோபத்தில் சிவந்தது. அவளின் அருகில் இருந்த அவளது தோழி காயத்ரி "ஏய் விஜி, நீ எவ்ளோ ப்ரவீனுக்கு எதிரா சப்போர்ட் பண்ணினாலும் ஜெயிக்கபோறது அவன்தான். எவ்ளோ உயிருக்கு உயிரா அவன் உன்னை நினைக்கிறான். அப்படிதானே நீயும் இருந்த.நல்ல டைப் டி பிரவீன். அவனுக்கு தேவை ஒரு அரவணைப்பும் ஆறுதலும் தான். சுனாமில அவன் குடும்பமே அழிஞ்சபோது அவன் எவ்ளோ கலங்கி இருப்பான். யோசிச்சுப்பாருடி. அவன் பாவம். உன்னை உயிரா நினைக்கிறான். அனாதை ஆக்கப்பட்டிருந்தாலும் அவன் படிப்பும் அவன் குணமும் தான் அவனை தனிமையிலும் நேர்மையாகவும் எதையும் தாங்கும் சக்தி கொண்டவனாகவும் ஆக்கிருக்கு. நீ அவன் பக்கத்தில் இருப்பது அவனுக்கு என்னவோ உலகமே கூட இருப்பதா நெனைக்கிறாண்டி. உனக்கு எது சந்தோஷமோ அதை மட்டுமே செய்யிற அவனையே சைக்கோன்னு சொல்றியே.என்னடி ஆச்சு உனக்கு" என்றாள் காயத்ரி. "நீ மூடிட்டு இரு. அப்டியே இருந்தாலும் எனக்கு சந்தோசம் இல்லாத கஷ்டத்தை குடுக்கற எதையும் செய்யமாட்டேன், உனக்கு கஷ்டம் தரக்கூடிய ஒரே விஷயம் என்னால் முடியும் என்றால் அது என் மரணம் னு என்கிட்டே சொன்னான் இல்ல, இப்போ இந்த சிக்ஸர் என் மனச கஷ்டப்படுத்திருக்கு. அங்க இருந்து என்னை பாத்துட்டு அப்புறம் தான இந்த சிக்சை அடிச்சான்."என்றாள் விஜி. "விஜி...நீ என்னவோ குழப்பத்துல இருக்க, நீ மேட்ச் முடிஞ்சதும் முபாரக் அண்ணன் கிட்டயும் விஜய் அண்ணன் கிட்டயும் ரியாஸ் அண்ணன் கிட்டயும் பேசு" என்றாள் காயத்ரி. "நீ உன் அட்வைஸ் நிறுத்து. இந்த மேட்ச் விழுப்புரம் ஜெயிக்கும், ஜெயிக்கணும். பிரவீன் தோக்கணும். அவன் கர்வத்துக்கும் அவன் திமுருக்கும் முடிவாய் இருக்கணும்." என்றாள் விஜி. "விஜி, சரி, லீவ் திஸ் டாபிக். உன் தங்கை ரம்யா ஊர்ல இருந்து வந்தாளே, எப்படி இருக்கா. காலேஜ் லைப் முடிஞ்சு ஜாப் லைப் எப்படி இருக்காம் அவளுக்கு. அவளையும் நம்ம குளோபல் டெக் ல நியூ ப்ராஞ்சுல போடலாமே, சேம் லைக் அவர் வித்யா" என்றாள் காயத்ரி. "யா, ஐ ஆம் திங்கிங் தி சேம். காஸ் அவளை தனியா விட்டது போதும். இனிமே நம்ம பார்வையிலேயே தான் இருக்கணும். சின்னப்பொண்ணு வேற, இம்மெச்சூரா இருக்கா." என்றாள் விஜி. இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே அடுத்த ஓவரை வீச தயாரானான் விழுப்புரத்தின் வீரர் கணேஷ். எதிர்கொண்ட முபாரக் இரண்டு ஓட்டங்கள் எடுக்க, ஓவர்த்ரோ முறையில் இன்னொரு ரன் ஓடினர் இருவரும். ப்ரவீனுக்கு அடிபட்டிருப்பதால் அவனுக்கு வாய்ப்பு தராமல் அவனை எதிர்முனையில் வைத்துக்கொண்டு தானே ஆடி ஜெயிக்கவேண்டும் என்று நினைத்திருந்த முபாரக் மூன்றாவது ரன் ஓட வேண்டாம் எனக்கூறியும் பிரவீன் ஓடி வரவே வேறு வழியின்றி ஓடினான். ஐந்து பந்துகளில் இருபது ஓட்டங்கள். சற்றே கடினம் தான். "விஜி, மனசுக்குள்ள, பிரவீன் ஜெயிக்கணும் னு தான நினைக்கிற" என்றாள் காயத்ரி. "ஷட் யுவர் ஹெல் ஆப்" என்றாள் விஜி. அடுத்த பந்தை எதிர்கொண்ட பிரவீன், அதையும் சிக்சருக்கு பறக்கவிட, ஆட்டம் எவருக்கு சாதகமாக போகும் என்ற ஐயம் அனைவரையும் தொற்றிக்கொண்டது. நான்கு பந்துகளில் பதினான்கு ரன்கள். அடுத்த பந்தையும் மைதானத்தை விட்டு பறக்கவிட்டான் பிரவீன். ஆட்டம் எழுபது சதவிகிதம் கடலூர் பக்கம் சாயவே, விஜி காயத்ரியிடம், "இவனா என் சந்தோஷத்துக்காக என்னவேண்ணாலும் பண்ணுவான்? ஒவ்வொரு பந்தையும் என்னை பார்த்து பார்த்து அடிக்கிறான். அடித்தபிறகும் இன்முகம் வாடியதாய் உணர்ந்தாலும் மீண்டும் அப்படியே செய்கிறான். பாரு. நான் எப்படி அவனை ஒதுக்குகிறேனோ அப்படியே அவன் என்னை செய்கிறான் பார். அவன் ஒரு பச்சோந்தி " என்றாள். மௌனமாய் இருந்தாள் காயத்ரி. மூன்று பந்துகளில் எட்டு ஓட்டங்கள். அடுத்த பந்து மீண்டும் பிரவீனின் மார்பை பதம் பார்க்க இம்முறை பலமான அடி இல்லை என்றாலும் ஒரு பந்து வீணாகிவிட்டது. அடுத்த பந்தை எதிர்கொண்டான் பிரவீன். அதுவும் இமாலய சிக்ஸராகவே ஒரு பந்தில் இரண்டு ஓட்டங்கள். பந்து மட்டையில் பட்டால் கடலூருக்கு வெற்றி. கடைசி பந்தை கணேஷ் வீச, பறந்தது சிக்ஸுக்கு. கடலூர் வெற்றி பெற்றது. மைதானத்திற்குள் கடலூர் அணியினர் அனைவரும் ஆர்ப்பரித்து ஓடிவர தொடங்கினர். மண்டியிட்டு எப்போதும்போல மைதானத்திற்கு முத்தமிட்டனர் ப்ரவீனும் முபாரக்கும். முத்தமிட்டு எழுந்த முபாரக்கை கட்டி தழுவிய அனைவரும் எழுந்திருக்காத பிரவீனை தொட, அவனது உடல் மட்டும் மண்ணில் சரிந்தது...... மைதானமே ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் ஆடிப்போனது. காயத்ரியும் விஜியும் ஓடி வந்தனர். காயத்ரி கண்கள் கலங்க விஜியோ பிரவீனை மடியில் சாய்த்துக்கொண்டு கதறி அழுதாள். அணியினர் அனைவரும் அழத்தொடங்கினர். "எல்லாரும் விலகுங்க, காத்து வரட்டும், ப்ளீஸ். விலகுங்க. முபாரக் அண்ணா....நூற்றிஎட்டுக்கு கால் பண்ணுங்க.....ப்ளீஸ்....டேய்....பிரவீன்.....எழுந்திரு டா....என்னடா ஆச்சு....பயமுறுத்தாத டா....உன்னோட விஜி டா...எழுந்திரு டா.....ப்ளீஸ்....நான் ஏதாவது தப்பு பண்ணிருந்தா சாரி டா..." விஜியின் கதறலை பார்த்த காயத்ரி திகைப்புடனும் கலக்கத்துடனும் அவளை தூக்கி சமாதானப்படுத்தினாள். ஆம்புலன்ஸ் அழைக்கப்பட்டது. ஆம்புலன்சில் ஏற்றிய பொழுதே அதிலிருந்த செவிலியர்கள் உயிர் பிரிந்துவிட்டதென அறிவித்தனர். அரசு மருத்துவமனை நோக்கி பிரவீனின் அந்த உயிரற்ற பிரேதமும் அதனுள்ளே விஜியின் நினைவுகளை சுமந்து துடிக்க மறந்த இதயமும் பயணப்பட்டது. ஆம்புலன்சில் முபாரக்கும் விஜியும் காயத்ரியும் சென்றனர். பிரவீனின் கையை பற்றியபடியே விஜி அவனது முகத்தை இமைக்காமல் பார்த்தபடியே அருகில் அமர்ந்திருந்தாள். ஆம்புலன்ஸ் மருத்துவமனையின் உள்ளே நுழைந்தது.பகுதி 1 முடிந்தது

எழுதியவர் : ஜெயராமன் (1-Sep-17, 12:55 pm)
பார்வை : 492

மேலே