வா கண்ணா வா
அனித்தா தன் அலைப்பேசியில் வந்த வாட்ஸாப் குறுஞ்செய்தி எடுத்துப் பார்த்தாள். அதில் சேகர் "அனித்தா இன்று லஞ்ச் வெளியே போகலாமா"? என்று கேட்டிருந்தான். அனித்தா புன்னகையுடன் அலைப்சிப்பேசியை எடுத்து பதிலளிக்கத் தொடங்கினாள். "எங்கே போகலாம்" என்றாள் அனித்தா.
சேகர் குதூக்கலத்துடன் அனித்தாவின் கேள்விக்கு பதிலளிப்பதற்காக சற்று நேரம் யோசித்து விட்டு "பாய் கடை பிரியாணி உணவகத்திற்கு போகலாம், அரை மணி நேரத்திற்குள் வந்துவிடுகிறேன், ரெடியா இரு" என்றான் சேகர்.
அனித்தா, "பாய் கடையா, கடை அவ்வளவு சுத்தமாக இருக்காதே, அதுவும் நான் பாய் கடையெல்லாம் சாப்பிட்டு பழக்கம் இல்லை" என்றாள்.
"அனித்தா, பாய் கடை பிரியாணி சும்மா அப்படித்தான் அருமையா இருக்பும், சுத்தம் என்னமோ முன்னே பின்னேதான் இருக்கும், ஆனால் சுவை அப்படித்தான் இருக்கும், நீ வா நான் கூட்டிக்கிட்டு போரேன்" என்று வற்புறுத்தினான் தெரியாமல்
"நீ என்னமோ பாசமாய் கூப்பிடுகிறாய், சரி வருகிறேன்" எனறாள் அனித்தா.
பத்து நிமிடத்தில் சேகர் தன் பி.எம்.டபில்யூ வாகனத்தை எடுத்துக்கொண்டு அனித்தாவை கூட்டிச்செல்ல வந்தான். அனித்தா வாகனத்தில் ஏறியவுடன், "சேகர் நீ வசதியானவன்னு தெரியும், ஆனால் பி.எம்.டபில்யூ வாகனமெல்லாம் வாங்குகிற அளவுக்கு வசதிபடைத்தவன்னா? எனக்கு தெரியாமல் போய்விட்டதே" என்று வெகுளியாக கேட்டாள்.
சேகர் புன்னகையுடன் "இது என் அப்பாவுடைய வாகனம், நேற்றுதான் வாங்கினார், அப்பாவுக்கு நிறுவனத்தில் வாகனம் கொடுத்திருப்பதால் இந்த வாகனத்தை என்னை பயன்படுத்திக்க சொல்லிவிட்டார்" என்றான்.
அனித்தா "அப்படியா" என்று ஆச்சரியத்துடன் பிரமிப்புடன் அவனைப் பார்த்தாள். ஆம். அனித்தா இரண்டாம் ஆண்டு பயிலும் கல்லூரி மாணவி. வீட்டில் ஒரே பெண் பிள்ளை அனித்தா. அப்பா அம்மா இருவருமே நாள் சம்பளம் வாங்கும் தொழிலாளிகள். வசதியில்லை என்றாலும் பாசத்திற்கு குறையேதும் இல்லை. இருவரின் பாசத்தின் பொருளே அனித்தா தான். ஒரே பிள்ளை அதுவும் வருடங்கள் கழித்து பிறந்தவள் அனித்தா. பெற்றோர்களின் வருமையை போக்கவே கடினமாக படித்தாள். பெற்றோரை பிரிய வேண்டி இருக்கும், என்பதற்பாக மேல் படிப்பை தொடரும் எண்ணமே அவளுக்கு இல்லை. இருப்பினும் பெற்றோரின் வருமையை போக்க கல்விதான் பிரம்மாஸ்திரம் என்பதால் மனதை கல்லாக்கிக் கொண்டு மேல் கல்வி தொடர வெளியூர் சென்று இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. இலட்சியங்களோடும் கனவுகளோடும் இருக்கும் பலருக்கு தடைகள் வருவது இயல்புதான், அது போலதான் அனித்தாவுக்கும் இதே நிலைமைதான்.
ஆம். அவன் தான் சேகர். ஓரளவுக்கு வசதிப் படைத்தக் குடும்பத்தின் ஒரே வாரிசு சேகர். வருடத்தில் முப்பது நாள் மட்டுமே வீட்டில் இருப்பர், மற்ற மீதம் உள்ள நாட்கள் வேலை வேலைன்னுதான் இருப்பர். பாசம் எந்த கடையில் என்ன விலையென்று கேட்கும் அளவுக்கு ஒருவருக்கொருவர் வீட்டில் பாசம் செலுத்தக் கூட நேரமில்லாமல் வாழ்ந்து வரும் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன் சேகர்.
சேகரும் அனித்தாவும் ஒரே கல்லூரியில் ஒரே வகுப்பில் வேறு பயில்கின்றனர். பாசம்னா என்னவென்று தெரியாமல் வளர்ந்த சேகருக்கு பாசமே உருவான அனித்தா மேல் ஈர்ப்பு வந்தது, நாளடைவில் காதலாகவும் மாறியது.
அனித்தாவுக்கும் அதே நிலைதான். பாசத்திற்கு அளவே இல்லையென்றாலும் வசதியில்லையில்லாத காரணத்தால் பணக்கார பையன் கணவனாக வந்தால் கொஞ்சம் பரவாயில்லை என்றெண்ணிய அனித்தாவுக்கு சேகரின் வசதியான வாழ்க்கை ஈர்த்தது. ஆனால் தன் ஏழ்மையான குடும்ப சூழ்நிலைக்கு காதல் கத்திரிக்காய் எல்லாம் சரிவராது என்று தனக்குள் புதைத்துக் கொண்டாள் அனித்தா.
பிரியாணி கடையில் சேகர் எதிரில் அனித்தா. "பிரியாணி எப்படி இருக்கு அனித்தா" என்றான் சேகர்.
"நான் என்னமோ நினைச்சேன், ஆனால் பிரியாணி அருமையா இருக்கு" என்றாள் அனித்தா.
"பிரியாணி பிடிச்சிருக்கா" என்று சேகர் கேட்டான்.
"ரொம்ப பிடிச்சிருக்கு" என்றாள்.
"பிரியாணி வாங்கிக் கொடுத்த என்னைப் பிடிச்சிருக்கா" என்று கேட்டான்.
"என்ன சேகர், எனக்கு புரியலை" என்றாள் அனித்தா.
"ஆம். அனித்தா நான் உன்னை காதலிக்கிறேன்" என்று தன் மனதில் உள்ளதை போட்டு உடைத்தான்.
அனித்தாவுக்கு ஒரு கணம் நம்ப முடியவில்லை. ஒரு பணக்கார பையன் தன்னை காதலிப்பது பெருமையாகவும் மகிழ்ச்சியாக இருந்தாலும், அவனின் காதலுக்கு தான் தகுதியானவளா என்று கேளவி அவள் மனதுக்குள் எழும்பியதனாள், அவனின் காதலை ஏற்க பயந்தாள்.
"சேகர், நான் உன்னுடைய காதலை ஏற்க முடியாது. நான் உனக்கு ஏற்றவள் அல்ல" என்றாள் அனித்தா.
"ஏன் அனித்தா, பணம் வசதியெல்லாம் எனக்கு முக்கியம் இல்லை, அன்பு, பாசம் மட்டும் தான் உன்னிடம் இருந்து எதிர்பார்க்கிறேன், யோசித்து முடிவு சொல்" என்றான் சேகர்.
அவன் அப்படி கூறியதும் அனித்தாவுக்கு அவன் காதலை ஏற்றாள் என்ன என்று மனதினுள் தோன்றியது.
மறுநாள் சேகரிடம் காதலை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தாள். நாட்கள் ஓடின, சேகரும் அனித்தாவின் குடும்பத்திற்கு பல உதவிகள் செய்தான். அனித்தாவை மேலும் இளங்களை பட்டப் படிப்பை தொடர உதவுவதாக வாக்களித்தான்.
ஒரு நாள் சேகர் அனித்தாவின் வீட்டிற்கு வந்தான். "என் அப்பா நம்ம காதலை ஏற்க மறுத்துவிட்டார்,இப்பொழுது எங்காவது போய் திருமணம் செய்து கொள்ளலாம்" என்றழைத்தான் சேகர்.
அனித்தா திடிக்கிட்டு, "நீ உன் குடும்பத்தை விட்டுவிட்டு நாம் எப்படி வசதியாக வாழ்வது" என்று கேட்டுவிட்டாள்.
இதை சற்றும் எதிர்பாராத சேகர் "அப்படின்னா நீ என்னை காதலிக்கவில்லையா? என் வசதியைத்தானா" என்றான்.
"ஆம். சேகர். வெறும் அன்பை மட்டும் வைத்துக்கொண்டு நீ நான் என் குடும்பம் எப்படி வாழ்வது" உன் அப்பாவின் சம்மத்துடன் வேண்டுமானால் கல்யாணம் செய்துக்கோள்ளலாம், இல்லையேல் என்னை மன்னித்துவிடு" என்றாள் அனித்தா.
சேகர் மனம் உடைந்து போனான். அனித்தாவை கடுமையாக திட்டிவிட்டு அவ்விடத்தை விட்டு கிளம்பினான்.
வருடங்கள் உருண்டோடின. அனித்தாவை பெண் கேட்டு ஒரு குடும்பம் வந்தது. மாப்பிள்ளையிடம் பேசிய போது, சேகரிடம் இருந்த ஆதரவான பேச்சு, அன்பான வார்த்தைகள் ஏதும் சிறிதளவு கூட இல்லை, என்பதை உணர்ந்தாள், சேகரை அதிக நாள் கழித்து மீண்டும் எண்ணத் தொடங்கியதை உணர்ந்தாள். மேலும் சுயநலஙாதியாகவே தென்பட்டது. அவன் வீட்டையும், வீட்டில் உள்ள பொருட்களையுமே பார்த்து கணக்கிட்ுக்கொ்டிருந்தான்.
இப்பொழுதுதான் அனித்தா வேலையெல்லாம் செய்யத் தொடங்கி வாயைக் கட்டி வயித்தைக் கட்டி சேர்த்து வைத்திருக்கிறாள். அதை எப்படி வீட்டிற்கு வரும் மாப்பிள்ளை அடத்துக் கொண்டு போவதா என்று அனித்தாவின் மனதில் தோன்றியது. மாப்பிள்ளை சென்றபின் மாப்பிள்ளை பிடிக்பாத காரணத்தை சொன்னாள், பெற்றோரிடம்.
அனித்தா, அன்று சேகர் தம்பியிடம் நீ எதை எதிர்ப் பார்த்தாயோ அதைதான் இந்த மாப்பிள்ளை உன்னிடம் எதிர்ப்பார்க்கிறான், நீ மற்றவருக்கு என்ன செய்தாயோ, அதுதான் வேறொருவர் உனக்கு செய்வார்கள். அது எப்படி தவறாகும். நீ சேகருக்கு செய்தது சரி என்றால், இந்த மாப்பிள்ளை செய்ததும் சரியே" என்று அனித்தாவுக்கு புரிய வைத்தார் அப்பா.
அனித்தா தன்னுடைய சுயநலத்திற்காக சேகரின் வாழ்வை பணைய வைக்க எண்ணியதை நினைத்து வருந்தினாள். சேகரை தேடும் பணியில் இறங்கினாள். அவனின் உண்மை காதலும் புரிந்தது.
வேறு வழியில்லாமல் சேகரின் அப்பாவின் நிறுவனத்திற்கே சென்றாள். அங்கே சேகரின் அம்மாவை மட்டுமே சந்திக்க நேர்ந்தது, சேகர் அவன் அப்பாவுடன் வெளியூர் வியாபாரத்தை பார்த்துக்கொள்வதாக சேகரின் அம்மா கூறினார்.
"அன்று உன்னை சோதிக்கவே, வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ளும் நாடகத்தை நான் சொல்லிதான் சேகர் நடத்தினான், நீ உண்மையில் சேகரைத்தான் காதலிக்கிறாயா, இல்லை பணத்தை காதலிக்கிறாயா என்று தெரிந்து கொள்ளவே நாடகம் நடத்தப்பட்டது, மற்ற படி நாங்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை, நீ மட்டும் அன்று சேகரை ஏற்றுக்கொண்டிருந்தாள் உனக்கு உண்மை புரிந்திருக்கும்" என்றார் சேகரின் அம்மா.
அனித்தா தன் முட்டாள் தனத்தை எண்ணி வருத்தப்பட்டதையும் நடந்த்தையும் சேகரின் அம்மாவிடம் தெரிவித்தாள்.
"சேகர் வரும் வரை நான் காத்துக்கிடப்பேன் அத்தை" என்று கூறிவிட்டு, அவனுக்காக வா கண்ணா வா, என்று அவனுக்காக காத்திருக்க முடிவு செய்தாள் அனித்தா.