மஞ்சக் கிழங்கு
மழ பெஞ்ச தண்ணியில நீ குளிக்கையில...
உன் மேல பட்ட தண்ணியெல்லாம் மஞ்சத் தண்ணியா கீழே இறங்குதடி..
மஞ்சக் கிழங்குக்கே வெட்கம் வந்து வெளுக்குதடி..
மஞ்ச தேய்க்க நீ மஞ்சக் கிழங்க எடுக்கையில!
அதுவும் உன்ன பாத்து பஞ்சா பறக்குதடி..!
மஞ்ச கேட்டு நீ மச்சான பாத்து சினுங்கையில!
மக்குப் பையன் மஞ்சளுக்கு எங்க தான் போவனடி?
உன் தலையில சிக்கிக் கடக்கும் சொட்டு தண்ணியும்
எகிறிக் குதிக்குதடி!
இன்னும் உன் மேல பட மழ மேகம் ஏங்குதடி!