வெம்மதி ஆகிடும் முழுமதி கண்டிட

உன்னில் என்னை காணத் தானே
இன்னுமொரு விடியல் காண்கிறேன் நானே
விடியாத இரவது நான்பெற்ற வரமே
பிரியாத உயிராய் நாம்வாழும் நேரமே
போர்வை நானாகி உன்குளிர் நீக்கியே
வேர்வை சிந்துவேன் விடியலை நோக்கியே...
வேர்அது எதுவோநம் காதல்பூ மரத்தின்
பார்வையில் தீமூட்டும் பாவையூன் விழியோ?
பதுமையில் புதுமையோ பதுமலர் பொழிவோ
பாவையுன் அசைவுகள் காமனின் கணைகளோ?
மெல்லிய இடைதனின் மடிப்புகள் ஊடே
மெல்ல பெருகும் வியர்வைத் தேனிலே
களைத்து இளைப்பாறும் வேளை யிதுவோ ?
துளைத்து யிரளாவும் மாலை மயக்கமோ?
நம்மதி இணைந்து உயிரிரண்டு புணர்ந்திட
வெம்மதி ஆகிடும் முழுமதி கண்டிட
நிம்மதி கொண்டே இன்றும் பிறக்கிறான்
என்விழி போன்றே சிவந்த சூரியன்...
உன்னில் என்னை காணத் தானே
இன்னுமொரு விடியல் காண்கிறேன் நானே...

எழுதியவர் : காசி.தங்கராசு (2-Sep-17, 4:32 am)
பார்வை : 101

மேலே