அனிதாவின் தற்கொடை

ஊடகம் வெளியிடம்
நூற்றுக்கணக்கான தற்கொலைச் செய்திகளில்
இதுவும் ஒன்றென இருந்தேன்!

இந்தச் செய்தி,
உண்மையான துயரச் செய்தியாய் மாறி,
மனதுக்குள் உக்கிரமாகி,
உச்சம் தொட்டு, காயப்பட்டு,
ஊனமானேன்!

தொலைக்காட்சியில் எங்கு
பார்த்தாலும் இவளின் புகைப்படமே!

அமைதியான முகம்,
தெளிவான பார்வை,
திடமான சிந்தனை,
கனிவான குரல்,
ஜெயித்தே தீருவேன் என்பது போன்று
அவளின் உடல்மொழி கொண்ட
துணிவான இவளை
தற்கொலையைக்கு தூண்டியது யார்?
அல்லது எது?

பிறந்த சாதியா?
வளர்ந்த ஊரா?
பணக் கஷ்டமா?
பெண் என்பதாலா ?

ஆளும் கையாலாகாத மாநில அரசா?
ஆட்டிவைக்கும் மத்திய அரசா?
ஜெயலலிதாவின் மறைவா?
பாடத்திட்டமா ?

இதில் எதுவாயினும் இருக்கலாம்.
இருந்தாலும்,
மொத்த சமூகமும் இதை
வெட்கித் தலைகுனிந்து
பொறுப்பேற்றே தீரவேண்டும்!

இப்படியொரு அவல ஆட்சி நிலை,
தமிழகத்தில் இதுவரை
நிகழ்ந்ததாய் அல்லது நிலவியதாய்
தெரியவில்லை.

இந்த நிலை மேம்பட,
ஒரு அரசியல் அறுவை சிகிச்சை
தேவைப்படுவது தவிர்க்க இயலாது!

அனிதாவின் கனவான
மருத்துவத்தை,
அவளின் தற்கொடைக்கு பிறகு,
தொடங்கிவிட்டதாய் தெரிகிறது.

ஆம்,
இப்போது ஆங்காங்கே
நடக்கும் மாணவர்கள் போராட்டம்,
அரசியலில் அறுவைசிகிச்சை துவங்கியதாய்
தெரிகிறது.

தமிழகத்தின் உடல் நிலை
இந்த அறுவைசிகிச்சை சற்று தேற்றிவிடும்
என்று நம்புவோமாக!!

அனிதா, தன் உயிரை குடையாய்
தந்து விட்டுச் சென்றதை,
கண்ணீருடன் மண்டியிட்டு
வணங்குகிறேன்............!!!!

---இப்படிக்கு,
எழுத மட்டுமே தெரிந்த அல்லது துணிந்த;
கணினியில் புரட்சி செய்யும் ஒரு கனிணிவாதி :(

எழுதியவர் : கணேஷ்குமார் balu (2-Sep-17, 10:23 pm)
பார்வை : 2440

மேலே