அனிதாவிற்கு கண்ணீர் அஞ்சலி

உனது வேட்கை ஏனடி வெந்து
தனல் ஆச்சு தங்கையே,
விறகாய் போவதற்கா
பனிரெண்டு காலம்
தவமிருந்தாய்.

மலரை சூடிக்கொள்ளாமல்
துடிப்பு மானியை கழுத்தில்
மாலையாக அணிந்துக்கொள்ள
நினைத்த உனக்கு நீட்
வைத்தது
மலர்வளையம்.

துணிந்திருக்க வேண்டும்
கண்ணகியாய் நீ காவிகளும்
கதர் சட்டைகளும் இங்கு தீக்கரையாக்கிருக்கப் பட
வேண்டும்,இந்த புண்ணிய பூமி
மீண்டும் உயிர்பெற்றிருக்கம்
அனிதா என்ற கங்கை
நதியால்.

தங்கையே உன் குரல் ஆழ்மனதில் சிலம்பொலியாய் தெறித்தன
மாணிக்கமோ முத்தோ அல்ல
சிதறியோடியது மருத்துவம்
மனசாட்சி அல்லாத
இந்த மக்கள் மா
மன்றத்தில்.

பாரதத்தின் கடைக்கோடி தமிழ்
இனம் நாங்கள், இந்த
தேசத்தின் முகவரியாய்
நாங்கள், உங்கள்
அழிவிற்கு அறைகூவல்
விடுகிறோம்,தங்கையை
இழந்து நிற்கிறோம்.

உணர்ச்சி மட்டும் கட்டவிழ்க்கும்
தன்மான பிள்ளைகள் மட்டும்
அல்ல நாங்கள்,உங்கள்
உறுதியை சல்லடையாக்கும்
தோட்டாக்கள் நாங்கள்
எங்கள் தங்கை இறுதி
ஊர்வலத்தோடு உம்
இறுதி அத்தியாயம்

மாண்பு இல்லாதவனுக்கு பெயர் மாநில அரசு.
மதியே அற்றவனுக்கு பெயர் மத்திய அரசு.
தூ.............................

எழுதியவர் : சூர்யா.. மா (3-Sep-17, 7:01 am)
சேர்த்தது : சூர்யா மா
பார்வை : 103

மேலே