பிழை

எத்தனை முறை
எழுதினாலும்
அத்தனை முறை
படிக்கும் போது
திருத்தத்தை
தழுவுகிறது
கவிதை
ஆம் நான்
எழுதியது.

கடல் தடுமாறி
விழுந்தது
ஆழிபேரலையாக
காயம் என்னவோ
என் தமிழ்
உறவுகளுக்குதான்.

வானம்பாடி பறவைகள்
கூடி ஆடி
பாட்டு பாடி
பிச்சை கேட்டது
மார்லின்
மன்றோவிடம்.

அனாதை சிறுவன்
பசியோடு வீதியில்
ஐந்து நட்சத்திர
விடுதி குப்பைத்
தொட்டி இனி
விருந்தினர்
மாளிகை.

கடவுள் என்னை
நேசிப்பதாக கூறி
கைப்பற்றி சென்றாள்
பிரியாணி
முட்டையும்
கண்டிப்பாக
கடவுளும்
என் பின்
வரிசையில்.

கம்பன் புலமை
கடலையும்
சிலையாய்
வடிக்கும்
என் போன்றோர்
அறிவில்லா
மூளையில்
சிறகாய்
மூளைக்கும்
பறக்கும்
மனதோடு
தமிழ்
நிலவானத்தில்.

எழுதியவர் : சூர்யா... மா (31-Aug-17, 8:26 pm)
Tanglish : pizhai
பார்வை : 243

மேலே