ஓர் வேண்டுகோள்

படித்து பிடித்த வேலையை செய்ய விரும்பி
ஊரை விட்டு ஊர் வரும் பெண்கள்...
அவர்களுள் நானும் ஒருத்தியே

உள்ளங்கை யும் முகமும் மட்டுமே வெளி காட்டும் உடை உடுத்தி
சாலையில் செல்ல, பார்த்திராத விலங்கிடம்
தகாத வார்த்தைகள் கேட்டழும் பெண்கள்...
அவர்களுள் நானும் ஒருத்தியே

முகம் தெரியா தோழி தொலைவில் நின்றிருக்க
கண்ணிமைக்கும் நேரத்தில் சீண்டி விட்டு செல்கிறான்
செய்வதறியாது நிற்கும் பெண்கள்...
அவர்களுள் நானும் ஒருத்தியே

சக தோழிகளிடம் கதைகள் கேட்டு செய்தித்தாள்களில் படித்து
மன வேதனை அடையும் பெண்கள்...
அவர்களுள் நானும் ஒருத்தியே

விழுங்கும் பார்வைகளில் தப்ப
சூரியனையும் வெயிலையும் குறை சொல்லி
துணியால் முகமூடி அணியும் பெண்கள்...
அவர்களுள் நானும் ஒருத்தியே

தந்தை சகோதரன் இவர்களின்
மூச்சு காற்று படும் தோலைவு மட்டுமே
நம் பாதுகாப்போ என வியக்கும் பெண்கள்...
அவர்களுள் நானும் ஒருத்தியே

தாய் சகோதரி தோழி காதலி மனைவி மகள் போன்ற உறவுகளிடம் கேளுங்கள்
ஆயிரம் கதைகள் கிடைக்கும்!!
மேலுள்ள வரிகளில் ஆங்காங்கே உள்ள மூன்று புள்ளிகளுக்கு
அவைகள் விளக்கமும் அளிக்கும்!!!

அனைத்து ஆண்களையும் குறை கூறவில்லை..
மேல் குறிப்பிட்ட ஆண்கள் உங்கள்
சகோதரனாகவோ
தோழனாகவோ
தந்தையாகவோ
உறவினராகவோ

இருக்கக்கூடும்..

அவர்களிடமுள்ள அக்குணம் உங்களுக்கு தெரியுமாயின்
திருத்த முயற்சிக்க வேண்டிக்கொள்ளும்
உங்கள் சகோதரிகளில் ஒருத்தி..

எழுதியவர் : (27-Aug-17, 9:03 am)
Tanglish : or ventukol
பார்வை : 52

மேலே