தலை முதல் கால் வரை காதல்
கொஞ்சும் கண்களை கொண்டவளே .....
காற்றாடும் தோடதிலே ஊஞ்சல் ஆடுகிறது என் காதல் ....
**-----------------------------------------**
என்னை பற்றி என்ன நினைத்தாய் உன் மனதில் ,,,,,,,
என் உள்ளம் எல்லாம்
நிறைந்து விட்டு,,,,,
ஏளனப் பார்வை கோர்க்கிறாய் கண்களில் ,,,,,
**---------------------------------**
உன் உதடு என்னுடன் நடத்தும் உரையாடல் பற்றி தெரியுமா உனக்கு ,,,,
உன் முகத்தை நோக்கி வந்த
என் மூச்சு கற்று,,,
உன் மூக்கை மட்டும் முத்தமிட்டதை என்றேனும் உணர்ந்தாயா ,,,,,?
**------------------------------------**
உன் கழுத்தில் வழிந்தோடும்
வியர்வை துளிகள்,,,,
மண்ணை சேராமல் தன்னை
மாய்த்து கொள்ளும் ,,,,
கரணம் புரியவில்லை எனக்கு ......
**-------------------------------------**
என்னுடன் நித்தமும் யுத்தம் செய்து வீழ்த்துகிறது உன் துப்பட்டா ,,,,
எப்போது கற்று கொடுத்தாய்
என்னுடன் போர் புரிய ,,,?
**--------------------------------------**
நான் அவள் மேல் கொண்ட
கடலளவு கோவம் கூட ,,,
அவள் இடைதனிலே மூழ்க செய்யும் மாயமே கேட்டுக் கொள் ,,,,,!
அவள் பாதம் தொடுவேன் மெட்டியிட ,,,!
கன்னம் தொடுவேன் முத்தமிட,,,!
அவள் நெற்றியில் நான் பதிக்கும் பொட்டு,,
மிளிரும் நாள்
வெகு தொலைவில் இல்லை ...!
**-------------------------------------**

