கவிதை விடு தூது
புதிர்களை மட்டும்நீ பன்னிரண்டு திங்களாய் புன்னகைகொண்டே போகும்வழி உதிர்த்துச்செல்ல
எதிர்கொள்ளா துறவியும் நானல்ல அறிவையுனை மணம்கொள்ளும் நாளொன்றும் தொலைவல்ல...
புறவழி அறமல்ல என் புரட்டாசிப் பூஞ்சிலையே...!
விழுதுகிளை பழுதுநிலை தொழுதுமுளை கழுகுவிதை பொழுதுமுனை எழும்நாழி அழுகிவிட
புழுதிகறை தழுவிதரை நழுவியதை வழுக்கொணர எழுதியெனை பழுத்தசதை புழுவாக்கினாயோ...!
நெடுமலை முகடுவழி கடுகளவே கசியும் நன்னீர் குறையல்ல நாளும்தொடர
வடுதுளை ஆகிதுகள் வந்தேசேரும் மடைவழி இடைவிலக்கி கடைநிலை காணநிற்கும் காவிரிக்கு...
குளம்நீந்தும் மதியவளை குமரியென கண்டதருணம் சிந்தைகளெல்லாம் விந்தையாக
இளமானாய் துதித்துகனை வீசிகளம் நிறைக்ககரம் பற்றிடவாவென நெஞ்சகத்தே பறைகொட்ட...
விற்பனை பிரதிநிதியென் விமர்சனங்கள் வினோதங்களுக்கெல்லாம் விடைகொடுக்குமாயின்
கற்பனை பரியமர்ந்து ஒருமுறையேனும் ஒப்பனையில் உலகினை வலம்வருவோம் வா...!
அகழிநிறை கவிவழிய கரிக்கோலில் அதைவடித்து முறையென முதன்மையாய் வாழ்த்துகின்றேன்
இகழிசைவோர் செவிமடுத்து உணரும்முன் ஒருசேர இருமனதை ஒளித்துவைப்போம் வா...!