சுற்றத்தால் குற்றத்தால்

வேளைக்கு வேளை
உணவு
கண்மூடாமல்
கனவு
என்றும் விட்டைப்பற்றிய
நினைவு
அன்று வந்தது
துணிவு
இன்று வந்தது
பணிவு
யாருக்கும் எங்கள் மேல் இல்லை
கனிவு
சிலர் குற்றத்தால்
பலர் சுற்றத்தால்
சிறைக்குள் நாங்கள்
சிறைபிடிக்கப்பட்ட மான்கள் !

எழுதியவர் : சூரியன்வேதா (8-Sep-17, 9:43 pm)
பார்வை : 223

மேலே