தமிழனே தடுக்க முடியாது

மாட்டு மூளை மத்திய அரசே-அவனிடம்
மாட்டிகிட்ட மாநில அரசே
மாணவர் கனவே மறக்கனுமா..?
மருத்துவ ஆசையே துறக்கனுமா..?

ஏய்த்து பிழைத்த கூட்டத்தை எல்லாம்
எமன் தொட மறுக்கும்போது
மாய்ந்து மாய்ந்து படித்தவள் மட்டும்
மனம் நொந்து சாகலாமா..?

நாடுகள் சுற்றும் நாய்தான்
நாட்டு மக்களே மதிப்பதில்லை
நடப்பது மக்களாட்சி என்று
நாட்டமைகளுக்கமா தெரியவில்லை..?

நீட்டுக்கு விலக்கு கேட்டு
நீதியே உரக்க கேட்டு
வீதியில் இறங்கும் என் தமிழனே
விளையாட்டாக எண்ணி விடாதே...

தடைகள் பல நீ போட்டாலும்
தமிழனே தடுக்க முடியாது
தண்டவாள ரயிலே போல
தகர்த்தெரிவோம் உன் சட்டத்தை...

தண்டவாள ரயிலே போல
தகர்த்தெரிவோம் உன் சட்டத்தை..!

எழுதியவர் : ந.இராஜ்குமார் (9-Sep-17, 3:19 am)
பார்வை : 1234

மேலே