கள்ளி என் காதலி

இருளொத்த குழல் கொண்டு
இருக்கியே இமைகட்டி!
பின்னலோடிணைத் தென்னை
பிணைக்கைதி ஆக்கிவிட்டாய்!
அஞ்சுகப் பேச்சுரைத்து- என்
நெஞ்சகம் கவர்ந்து விடும்!
கள்ளியாய் ஆனாயே
இக்கலையினை கற்றதெங்கோ!
வானுறங்கும் வேலையிலே
வந்துலவும் வெண்மதிபோல்!
ஊருறங்கும் வேலையிலே-என்
உள்ளத்தினை உலவவிட்ட!
ஊழ்வினைகள் உனைவிடுமோ
நமை உறவாக்கி பார்க்கும் வரை...

எழுதியவர் : சுரேந்திரன் (10-Sep-17, 4:09 pm)
சேர்த்தது : surendran
பார்வை : 92

மேலே