அன்புள்ள அனிதா

மரணத்தின் வாயிலாக
மனு கொடுத்துச் சென்றவளே,
இம்மதி கெட்டச் சமூகத்தின்
சுய நலம்தான் அறிவாயோ...!

கனவு காணுங்கள்-ன்னு சொன்ன
கலாமின் மறைவிற்குப் பின்
கண்ட கனவால் ஆகிய, உன்
கதி நிலையை உணர்வாயோ...!

இத்தேர்வு முறை கண்டு
தேம்புவோர் பல உண்டு
ஆயினும், காசு பணம் இருந்தால்தான்
கைகொடுக்கும் நம்ம கவர்மெண்ட்....!

கல்விக் கண் திறந்த
காமராஜர் பிறந்த நாட்டில், உன்
மருத்துவக் கனவு இன்று
மண்ணாய்ப் போனதேனோ...!

கண்ணு கலங்குதடி, உன்
நிலை கண்டு வருந்தையில
இருப்பினும், ஊரே தூங்குதடி உன்
முகத்த பார்த்த பின்னும்...!

காலக் கொடுமையடி, இது
எந்த ஜென்மப் பாவமடி, என்ன
காரியம் செய்தாயடி, இது
யாருக்கு கொடுத்த செருப்படி...?

எழுதியவர் : ப. சௌந்தர் (11-Sep-17, 11:02 am)
சேர்த்தது : சௌந்தர்
பார்வை : 594

மேலே