எழுத்தாளன்

அன்பென்னும் உணர்வை
இனி பழங்கால ஓலைச்சுவடிகளில்
படிக்க மட்டும்தான் முடியுமோ ?

நீதியின் சுத்தியல்கள் பணக்கறையான்களால்
துகள் துகளாய் அரித்துப்
போடப்பட்டுவிடுமோ ?

அகிம்சை தன் பொறுமை இழந்து
வாள் ஏந்தி புறப்பட்டுவிடுமோ ?

மனிதன் என்னும் மகாத்தானவன்
நாகரீகம் என்னும் பரிணாமத்தில்
மீண்டும் மிருகமாய் போவானோ ?

இல்லை !
மேற்கண்ட அனைத்தும்
நிச்சயமாய் ஒருபோதும்
நடப்பதற்கில்லை

இவன் கைகளில் காகிதமும்
அந்த மூடப்படாத பேனாவும்
இருக்கும் வரை ........

எழுதியவர் : இம்மானுவேல் (24-Jul-11, 7:58 am)
சேர்த்தது : Immanuvel
பார்வை : 319

மேலே